வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவின் அண்டை மாநிலமான வங்காளதேசத்தில் விமானப்படை பயிற்சி விமானத்தின் பயிற்சி விமானம் ஒன்று டாக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில்16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்தனர் என்று வங்கதேசம் இராணுவம் மற்றும் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் ஆகியவை தெரிவித்துள்ளன.
பள்ளி வளாகத்தில் விழுந்த விமானம்
விபத்துக்குள்ளான விமானம் F-7 BGI விமானம் விமானப்படைக்குச் சொந்தமானது என்பதை பங்களாதேஷ் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒரு சுருக்கமான அறிக்கையில் உறுதிப்படுத்தியது. பங்களாதேஷ் வடக்கு உத்தரா பகுதியில் நடந்த விபத்தில் விமானம் அந்த பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி கட்டடம் மீது மோதியது. விமானம் விழுந்த நேரத்தில் பள்ளியில் குழந்தைகள் இருந்தனர்.
16 பேர் பலி
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராய்ட்டர்ஸிடம் தொலைபேசியில் பேசிய தீயணைப்பு அதிகாரி லிமா கான், உயிரிழப்புகள் குறித்த கூடுதல் விவரங்களைக் குறிப்பிடவில்லை.
விபத்துக்கான காரணம் என்ன?
செய்தியாளர்களிடம் தொலைபேசியில் பேசிய தீயணைப்பு அதிகாரி லீமா கான், "குறைந்தது ஒருவர் இறந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்" என்று கூறினார்,. ஆனால் அவர் கூடுதல் தகவல்களை வழங்கவில்லை என்று செய்தி நிறுவனம் AP தெரிவித்துள்ளது. பின்பு பலி எண்ணிக்கை 16 ஆகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆகவும் உயர்ந்தது.வங்கதேச ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒரு சுருக்கமான அறிக்கையில், விமானம் விமானப்படைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தியது. விபத்துக்கான காரணம் அல்லது விமானி வெளியேறினாரா என்பது குறித்து அறிக்கையில் விரிவாக எதுவும் கூறப்படவில்லை.
பள்ளியில் வகுப்புகள் நடந்தபோது விபத்து
மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியின் செய்தித் தொடர்பாளர், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பள்ளி வாயிலுக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தினார். "விமானம் வாயிலில் விழுந்து அருகில் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான வேளையில் வகுப்புகள் நடந்தன'' என்று தெரிவித்தார்.
