இந்தியாவுக்கு சவால் விட்ட பங்ளாதேஷ்..!! சட்ட விரோத ஊடுருவலுக்கு அமித்ஷா ஆதாரம் காட்ட வேண்டும்..!!
முறையான ஆவணங்கள் இன்றி வங்கதேச இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி இருந்தால் அது குறித்து இந்திய அரசு எங்களுக்கு தெரிவிக்கலாம் ,
வங்கதேசிகள் இந்தியாவிற்குள் ஊடுருவினார்கள் என்பதை இந்தியாவால் நிரூபிக்க முடியுமா என வங்காளதேச பிரதம ஆலோசகர் இந்தியாவிற்கு சவால் விடுத்துள்ளார். இந்தியா கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் காட்டுத்தீயாய் பரவி வருகிறது . இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது . குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறிவைத்து பாஜக நடத்தும் சதி வேலை இது என இச்சட்டத்தை விமர்சித்து வருகின்றனர் . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்துள்ள மலேசிய பிரதமர் மத அடிப்படையில் குடியுரிமை சட்டத்தை இந்திய அணுகுவது மதச்சார்பற்ற நாடு இந்தியா என்பதை கேள்விக்குறியாக்கி இருக்கிறது . இதேபோன்றதொரு நடவடிக்கையை மலேசியா எடுத்தாள் அதனால் ஏற்படும் விளைவு என்ன வாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக வடகிழக்கு மாகாணமான அசாமின் வங்க தேசத்தவர்கள் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கும் மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நடைமுறைப்படுத்தி அங்கு குடியுரிமை இல்லாதவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது . இதற்காக சுமார் 8,500 கோடி ரூபாயை மத்திய அரசு நிதியாக ஒதுக்கி உள்ளது . அதேபோல குடியுரிமை திருத்த சட்டத்திற்கு உலக நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன . இந்த சட்டத்தை கொண்டு வந்த அமைச்சர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கோரிக்கைகள் வந்துள்ளன . இந்நிலையில் இந்தியாவின் ஆதரவுடன் சுதந்திரம் பெற்ற வங்காளதேசம்கூட தற்போது இந்தியாவை நோக்கி சவால்விடும் நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது .
அதாவது குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து கூறியுள்ளார் . ஆனால் அது அண்டை நாடுகளை பாதிக்கும் என்றும் ஒரு கருத்து வைத்துள்ளனர் இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமை அலோசகர், முறையான ஆவணங்கள் இன்றி வங்கதேச இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி இருந்தால் அது குறித்து இந்திய அரசு எங்களுக்கு தெரிவிக்கலாம் , இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொரு வங்கதேச குடிமகனையும் நாங்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம் . ஆனால் இந்தியாவில் அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவினார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் . மற்றபடி குடியுரிமை சட்டம் என்பதெல்லாம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என சவால் விடுத்துள்ளார்.