ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விடைபெற்றாா் பான் கி மூன்!

ஐ.நா. பொதுச்செயலாளர் Bank Ki-Moon-ன் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர். தனது இதயம் எப்போதும் ஐ.நா. சபை மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியிலேயே உலவும் என Bank Ki-Moon நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

கொரியாவில் 1944-ம் ஆண்டு பிறந்த Bank Ki-Moon, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொது ஆட்சி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இதனையடுத்து, தென்கொரியாவின் இந்திய தூதரகத்தில் முதன்முதலாக பணியில் சேர்ந்தார். தென்கொரிய வெளியுறவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், ஐக்கிய நாடுகள் சபையின் 8-வது பொதுச்செயலாளராக கடந்த 2007-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 

ஐ.நா. பொதுச்செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன், தென்கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் Bank Ki-Moon பதவி வகித்தார். 

மரண தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியபோதும், தனது பதவிக்காலத்தில் சதாம் உசேனின் மரண தண்டனை இடைநிறுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என Bank Ki-Moon மீது குற்றச்சாட்டு உள்ளது. 

இந்நிலையில், தனது 10 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர். தனது இதயம் எப்போதும் ஐ.நா. சபை மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியிலேயே உலவும் என Bank Ki-Moon நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.