தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு முழுவதையும் கவனத்தோடு படித்த பிறகு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்
வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது என பாகிஸ்தான் அமைச்சர் அயோத்தி தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி இந்துக்களுக்கே. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு இருந்தது.
நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. "தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு முழுவதையும் கவனத்தோடு படித்த பிறகு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்" என்று சுன்னி வக்ஃப் வாரிய மூத்த வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜிலானி தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், ‘’அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் 'வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது' என்று பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் ஹுசைன் ட்விட்டர் பக்கத்தில் அயோத்தி தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Shameful, disgusting, illegal and immoral https://t.co/Apx5n529Td
— Ch Fawad Hussain (@fawadchaudhry) November 9, 2019
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 9, 2019, 1:19 PM IST