துருக்‍கியில் ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்‍குதலில் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.

துருக்கியில் ராணுவ வீரர்கைளையும், போலீசாரையும் குறிவைத்து குர்தீஸ் இனப்போராளிகளும், பிற பயங்கரவாத அமைப்புகளும் தாக்‍குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சிலநாட்களுக்‍கு முன்பு இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 30 க்‍கும் மேற்பட்ட போலீசார் பலியாகினர்.

இந்நிலையில், காய்சேரி நகரில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த பேருந்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்‍குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்தின் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து இந்த தாக்‍குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதில், 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 50 க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்‍கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.