பெண்களை கொன்று குவித்து அட்டூழியம்... தலிபான்களால் எல்லாம் போச்சு... கதறும் ஆப்கானிஸ்தான்..!
தலிபான்கள் கைப்பற்றலுக்கு முன்பிருந்த அதே சுதந்திரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று ஆப்கான் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைபற்றிய நாள் முதல் கொலைகள் சர்வசாதரணமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கெளர் மாகாணத்தில் உள்ள பிரூச்கோவ் எனும் ஊரில் தாலிபான்கள் நடத்திய கொலைவெறி சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆப்கன் போலீஸ் படையில் இருந்த பெண்களை தேடித்தேடி கொன்று வருகின்றனர் தாலிபான் தீவிரவாதிகள். இதன் ஒரு பகுதியாக பிரூச்கோவில் வசித்து வந்த நெகர் எனும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய அவர் வீட்டிற்குள் புகுந்த தாலிபான்கள் அவரது குடும்பத்தினருக்கு முன்பே அவரை கொடூரமாக கொன்று தீர்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தலிபான்கள் கைப்பற்றலுக்கு முன்பிருந்த அதே சுதந்திரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று ஆப்கான் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிபோய் விட்டதாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஷ்ரஃப் கனி ஆட்சியின் போது தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரம், தலிபான்கள் ஆட்சியிலும் வழங்கப்பட வேண்டும் என்று ஆப்கான் பெண்கள் கருத்து தெரிவித்தனர். கல்வி, அரசியல், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.