Asianet News TamilAsianet News Tamil

Artificial sun சீனா கண்டுபிடித்த செயற்கை சூரியன்... அலறும் அண்டை நாடுகள்..!

ஏழு கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி, இந்த செயற்கை சூரியன் கண்டுபிடிப்பு, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Artificial sun invented by China ... screaming countries ..!
Author
China, First Published Jan 9, 2022, 4:51 PM IST

தங்களிடம் கண்டுபிடிப்புக்கு பஞ்சமே இல்லை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது சீனா. இயற்கை சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பம் கொண்ட செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளது சீனா. ஏழு கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி, இந்த செயற்கை சூரியன் கண்டுபிடிப்பு, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.Artificial sun invented by China ... screaming countries ..!

1999ம் ஆண்டிலிருந்தே ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வந்த சீனா, இதற்காக 70 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை உற்பத்தி செய்த இந்த செயற்கை சூரியன், படிப்படியாக சீன விஞ்ஞானிகளால் மேம்படுத்தப்பட்டு சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உற்பத்தி செய்தது.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். மேலும் தொடர்ந்து 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. பொதுவாக சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது. சூரியனின் மையப் பகுதி, ஹைட்ரஜன் கருக்களை ஹீலியத்துடன் இணைப்பதன் மூலம் ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது.

Artificial sun invented by China ... screaming countries ..!
சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் இந்த செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிற்கு எப்படி ஆதரவு கிடைக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பும்.சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சில நாடுகள் தங்களின் அச்சத்தை தெரிவித்து இருக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios