காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து... உண்மை மறைத்த இந்தியா... அமெரிக்கா பகீர் தகவல்..!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது குறித்து இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, தி பிரிண்ட் செய்தி வலைத்தளம் திங்களன்று வெளியிட்ட செய்தியில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது குறித்து இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே, தி பிரிண்ட் செய்தி வலைத்தளம் திங்களன்று வெளியிட்ட செய்தியில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்த தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றிவரும் நிலையில், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.