RUSSIA-UKRAINE CRISIS: அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கத் தயார்... உக்ரைன் மக்களுக்கு ஜெலன்ஷ்கி அழைப்பு!!
நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் போர் காரணமாக சிவில் விமான போக்குவரத்திற்கு உக்ரைன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளது.
உக்ரைன் மீது 3வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் படைகள் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தலைநகர் கிவ் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளை நமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம். நாம் இந்த போரை நிறுத்த வேண்டும். நாம் அமைதியாக வாழலாம் என்றார்.