டெஸ்லா நிர்வாகிகளை அமெரிக்காவில் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் மின் வாகனத் துறை மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பு, தமிழ்நாட்டில் டெஸ்லாவின் உற்பத்தி யூனிட் அமைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுடன் முக்கியமான கலந்துரையாடல் நடத்தியுள்ளார். 

இதுதொடர்பான பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு முக்கியமாக தமிழ்நாட்டில் மின் வாகனத் துறை மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

டெஸ்லா தொழிற்சாலையில் அண்ணாமலை

டெஸ்லா நிறுவனத்தின் முன்னணி தொழில்நுட்பங்கள், மின்கலத் திறன் மேம்பாடு மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகள் பற்றிய விரிவான ஆய்வு பேச்சுவார்த்தையில் இடம்பெற்றது. அண்ணாமலை, தமிழ்நாட்டின் சிறந்த தொழில்துறை அமைப்பு, திறன் வாய்ந்த மனிதவளம் மற்றும் மாநில அரசின் மின் வாகனங்களுக்கான ஆதரவுக் கொள்கைகள் குறித்து விளக்கமாகத் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் அமையுமா டெஸ்லா பேக்டரி?

அண்ணாமலை நடத்திய இந்த சந்திப்பு ஆனது தமிழ்நாட்டில் டெஸ்லாவின் உற்பத்தி யூனிட் அமைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. மேலும், தமிழ்நாடு இந்தியாவின் மின் வாகன உற்பத்தி மையமாக உருமாறுவதற்கு வாய்ப்புள்ளது.

View post on Instagram

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய உலகின் நகர்வில், இத்தகைய உயர்மட்ட முயற்சிகள் தமிழ்நாட்டை பசுமை ஆற்றல் துறையில் முன்னணி மாநிலமாக உருவாக்க உதவும். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அண்ணாமலை, தொடர்ந்து பல ஊர்களை சுற்றிப் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு ரியல் ஜாக்பாட்! ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல் - முதல்வர் உத்தரவு