உக்ரைன் -ரஷ்யா போர்.. செல்ல பிராணிகளை மீட்டு தருமாறு ஆந்திர மருத்துவர் இந்திய அரசுக்கு கோரிக்கை
உக்ரைனில் வசிக்கும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர், போரில் சிக்கியுள்ள தனது செல்ல பிராணிகளை மீட்க உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
42 வயதான எலும்பியல் மருத்துவரான கிதிகுமார் பாட்டீல் என்பவர் கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக அந்த பகுதியில் இவர் வெளியேற்றப்பட்டார்.
அப்போது தான் வளர்த்த ஜாகுவார் மற்றும் சிறுத்தை குட்டிகளை, விவசாயி ஒருவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், தனது செல்ல பிராணிகளை மீட்க உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க:ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தல்… கலிபோர்னியாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
பிராணிகள் மீது கொண்ட அதீத அன்பு காரணமாக அனைவராலும் செல்லமாக ஜாகுவார் குமார் என்று தான் அழைக்கப்பட்டு வந்துள்ளார். சிறுத்தை - ஜாகுவார் கலப்பில் பிறந்த அரிய வகை இனமான யாஷா எனும் ஜாகுவாரும், சப்ரினா எனும் பெண் கருப்பு சிறுத்தை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.
இதனை தலைநகர் கீவ்வில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
போர் காரணமாக வெளியேறிய இவர் போலந்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.
மேலும் படிக்க:dubai temple:துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்! சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு
மேலும் செவரோடோனெட்ஸ்கில் உள்ள குண்டிவெடிப்பால் சேதமடைந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.