லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது இந்திய மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்.. பரபரப்பு சம்பவம்..!
லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்ற இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் 33 வயதான இந்திய மாணவி ஒருவர் தனது லண்டன் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது லாரியில் மோதி பலியானார். நிதி ஆயோக் உடன் பணிபுரிந்த செசிதா கோச்சார் (Cheista Kochhar), லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் தனது பிஎச்டி படித்துக் கொண்டிருந்தார். நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், அவர் இறந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செசிதா கோச்சார் என்னுடன் நிதி ஆயோக்கின் லைஃப் திட்டத்தில் பணிபுரிந்தார். லண்டனில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும்போது ட்ராஃபிக் சம்பவத்தில் இறந்துள்ளார். அவர் புத்திசாலியாகவும், தைரியமாகவும் இருந்தால். சீக்கிரம் போய்விட்டாள். ரிப்” என்று பதிவிட்டுள்ளார். மார்ச் 19 அன்று, கோச்சார் மீது குப்பை லாரி மோதியது.
விபத்து நடந்தபோது அவரது கணவர் பிரசாந்த் அவருக்கு முன்னால் சென்று அவரைக் காப்பாற்ற விரைந்தார். அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். முன்னதாக குருகிராமில் வசித்து வந்த செசிதா கோச்சார், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நிறுவன நடத்தை மேலாண்மையில் பிஎச்டி படிப்பதற்காக கடந்த செப்டம்பரில் லண்டனுக்கு சென்றார்.
முன்னதாக டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் பயின்றார். அவர் 2021-23ல் NITI ஆயோக்கில் இந்தியாவின் தேசிய நடத்தை நுண்ணறிவு பிரிவில் மூத்த ஆலோசகராக இருந்ததாக அவரது LinkedIn பயோ தெரிவிக்கிறது.