an art of donald trump sold for 18 lakhs
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றிற்காக இந்த ஓவியத்தை அதிபர் ட்ரம்ப் வரைந்தார்.
இந்த ஓவியத்தில் தனக்கு சொந்தமான ’டிரம்ப் டவர்’ கட்டிடத்தை முன்னிலைப்படுத்தி ஓவியத்தை டிரம்ப் வரைந்திருந்தார்.
இந்த ஓவியம் லாஸ் ஏஞ்சல்ஸில் இயங்கும் நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது.

வெறும் 9,000 அமெரிக்க டாலர்களில் தொடங்கிய இந்த ஓவியத்தின் ஏலம், கடைசியாக, 29,184 அமெரிக்க டாலர்களில் முடிவடைந்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18,73,175 ரூபாய் ஆகும்.
இதற்கு முன்னர் ஏற்கனவே, டிரம்ப் பயன்படுத்திய ஃபெராரி கார், கோல்ப் கிளப்பின் ஒரு தொகுப்பு மற்றும் டிரம்ப் கையெழுத்திட்ட விஸ்கி பாட்டில் ஆகியவை ஏலம் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
