”மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உடலுக்கும் கேடு” என்று அரசாங்கம் எவ்வளவு தான் அறிவுரை சொன்னாலும், அதை கேட்கும் மனநிலையில் இல்லை மக்கள்.

அப்படி மதுவிற்கு அடிமையான ஒரு பெண் அவரது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடோ மாகாணத்தில் வசிக்கும் தாய் ஒருவர், அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அந்த போதையில் தனது குழந்தைகள் இருவரையும் வீட்டின் ஜன்னல் அருகே உள்ள இடத்தில் அமர வைத்திருக்கிறார்.

அவர் வசிப்பது ஒரு அடுக்குமாடி கட்டிடம். இதனால் அந்த ஜன்னல் அருகே இருந்து சிறிதளவு நகர்ந்தாலும் குழந்தைகளின் உயிருக்கு தான் ஆபத்து. போதையில் இருந்ததால் அவர் இதனை உணரவில்லை.

ஆனால் அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு போலீசிற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது கூட அந்த பெண் போலீசாரிடம் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள். இங்கு என்ன செய்கிறீர்கள்? என போதையில் தொந்தரவு கொடுத்திருக்கிறார் அந்த பெண். அவரை ஒருவாராக சமாளித்த போலீசார் குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்தில் தங்கவைத்திருக்கின்றனர். அதன் பிறகு அந்த பெண்ணை குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் மனநலன் பெற அனுப்பி வைத்திருக்கின்றனர்.