மூக்கு வழியாக உடலில் புகுந்து மூளையை பாதிக்கும் அமீபா... ஒரே வாரத்துல ஆள் காலி... கிளம்பியது அடுத்த ஆபத்து..!

அமெரிக்காவில் மூளையில் தொற்றை ஏற்படுத்தும் நெக்லீரியா ஃபோலெரி என்னும் அரிய வகை அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Amoeba to blow through the nose and affect the brain

அமெரிக்காவில் மூளையில் தொற்றை ஏற்படுத்தும் நெக்லீரியா ஃபோலெரி என்னும் அரிய வகை அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Amoeba to blow through the nose and affect the brain

ஆனால் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்று கூறப்பட்டுள்ளது. இது மிக அரிதாகவே தொற்றும் என்றாலும், இந்த அரிதான தொற்றுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டின் தென் பகுதியில்தான் நிகழும். ஃபுளோரிடாவில் 1962ம் ஆண்டில் இருந்து 37 பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த அமீபாவால் பாதிப்பு நிகழ்கிறது.

இந்த வகை அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். பெரும்பாலும் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்தில் உயிரிழந்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Amoeba to blow through the nose and affect the brain

எனவே இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என ஃபுளோரிடாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நெக்லேரியா ஃபௌலேரி என்ற அமீபா மிக அரிதானது என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios