இரண்டரை லட்சம் கோடி ஜீவனாம்சம் வழங்கிய பிரபல தொழிலதிபர் !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 6, Apr 2019, 8:54 AM IST
amezone owner gave mony
Highlights

உலகிலேயே அதிக அளவாக அமேசான் தலைவர்  விவாகரத்தான தனது மனைவிக்கு இரண்டரை  லட்சம் கோடி ரூபாய் ஜீவனாம்சம்வழங்கியுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இவரது தற்போதைய சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும்.

ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவன தலைவராகவும், பெரிய கோடீஸ்வரராகவும் ஆவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. அதன்பின்னர் 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தை ஜெப் பெசோஸ் தொடங்கினார்.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றதால் லாபத்தை அள்ளிக்குவித்தது. இதன் மூலம் ஜெப் பெசோஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

ஜெப் பெசோஸ்-மெக்கின்சி தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அத்துடன் ஒரு பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். அதன்படி நேற்று இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 4 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு இழப்பீடாக அளிக்க ஜெப் பெசோஸ் ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.

மெக்கின்சி இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அத்துடன் ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘பூளு ஆர்ஜின்’ ஆகிய நிறுவனங்களில் தனக்கு இருக்கும் பங்குகளை கணவருக்கு விட்டுக்கொடுப்பதாக மெக்கின்சி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இருவரும் விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த தகவலை இருவரும் தனித்தனியாக தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுப்பதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஜெப் பேசோஸ்.

தனது மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீதத்தை மனைவிக்கு கொடுத்தாலும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பேசோஸ் தொடர்கிறார்.
அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

loader