சீனா குறித்து மிகத் தீவிரமாக விசாரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ,  சீனாவும் உலக சுகாதார அமைப்பும் ஆரம்பத்தில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை மூடி மறைத்ததா.? என்பதை விசாரிக்க அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது .  இந்த வைரஸ் எப்போது தோன்றியது அது எப்படி பரவியது என விரிவாக தகவல் திரட்டவும்  புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில பத்திரிக்கைக்கு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா மிகக் கடுமையாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது .  அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியுள்ளது .  மேலும் இந்த வைரஸ்  பரவல் தொடரும் என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் சுகாதார வல்லுனர்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர் .  இந்நிலையில்  வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வரும் அமெரிக்கா தனது மொத்த கோபத்தையும் சீனாவின் மீது வெளிப்படுத்தி வருகிறது .  அதுமட்டுமின்றி ஆரம்பக்கட்டத்திலேயே சீனா இந்த வைரஸ் குறித்த தகவலை தெரிவித்திருந்தால் தற்போதைய ஏற்பட்டிருக்கும் இந்த பேரழிவிலிருந்து உலகம் தப்பித்து இருக்கும்,  ஆனால் அமெரிக்காவும் உலக சுகாதார நிறுவனமும் கூட்டு சேர்ந்து கொண்டு  அதை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து விட்டனர்  என அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார் .   அதேபோல் சீனாவுக்குள் அமெரிக்க வல்லுனர் குழுவை அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார் ,  ஆனால்  அதை சீனா மறுத்துவிட்டது .  அமெரிக்க வல்லுனர் குழுவை  சீனாவில் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும்,   சீனா குறித்து விசாரனையை  அமெரிக்கா தீவிரப்படுத்தும்  என எச்சரித்தார். 

சீனாவில் இருந்துதான் வைரஸ் கசிந்தது என்பதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் நிறைய உள்ளன,  அதுகுறித்து இன்னும் கூடுதல் தகவல்களை  அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக  திரட்டும் என தெரிவித்திருந்தார் .  இந்நிலையில்  சீனாவும் உலக சுகாதார அமைப்பும் ஆரம்பத்தில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை மூடி மறைத்து விட்டனவா என விசாரிக்க அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது .  இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகளுக்கு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஆரம்பம் ,  அது பரவிய விதம் ,  சீன அரசு கையாண்ட விதம் , அதில் உலக சுகாதார நிறுவனத்தின் தொடர்பு அனைத்தையும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . குறிப்பாக சிஐஏ வுக்கு வெள்ளை மாளிகையில் இருந்து சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என  வெள்ளை மாளிகை  முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  இந்த விசாரணையில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தகவல் தொடர்பு இடை மறித்தல் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை சேகரிக்க அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்யும் இரண்டு ஆய்வுக் கூடங்கள் பற்றி உலகச் சுகாதார நிறுவனம்  ஏற்கனவே அறிந்திருந்ததா.?  அங்கிருந்து வைரஸ் பரவிய உடன் அதை உலகச் சுகாதார நிறுவனம் என்ன செய்தது , இதில் எங்கே தவறு நடந்தது ,   என்பன குறித்து விவரமாக தகவல் சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது .  சீனாவின்  வுஹான்  ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் கசிந்ததாக யூகிக்கப்படும் நிலையில் வுஹான் ஆய்வுக் கூடம் அமெரிக்காவின் பருந்து பார்வைக்குள் வந்துள்ளது .