Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina:தில்லா, கெத்தா சீனாக்காரன் எல்லையில் சீன்போட்ட அமெரிக்கா..!! போர்கப்பல்கள் செய்த அதகளம்..!!

அமெரிக்காவின் இப்பெரிய இராணுவப் பயிற்சி சீனாவிற்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது, மேலும் பிராந்தியத்தின் சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் அமெரிக்கா ரோந்துப் பணியில் தனது போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் ஈடுபடுத்தி வருகிறது.

American war ship did war rehearsal at china ocean
Author
Delhi, First Published Jun 25, 2020, 3:27 PM IST

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சீனா எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் விமானங்கள் தாங்கிய இரண்டு  போர்கப்பல்கள்  பிலிப்பைன்ஸ்-சீனா கடல் எல்லைக்கு அருகே போர் ஒத்திகை நடத்திகாட்டியுள்ளது. இது சீனாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை எனவும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தென்சீனக்கடல் தொடங்கி இந்திய எல்லை வரை சீனா தனது ராணுவ பலத்தை காட்டி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில் தென்சீன கடலில் சீன ஆதிக்கத்தை ஆரம்பம் முதலே அமெரிக்கா எதிர்த்து வரும் நிலையில், கொரொனா பரவல் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் புதியப் பனிப்போராக மாறியுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா, தைவான், வியட்நாம், உள்ளிட்ட அமெரிக்காவின் நட்புநாடுகளுடன் சீனா அத்துமீறிலில் ஈடுபட்டுவரும் நிலையில்,   சீனாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா தனது இரண்டு முக்கிய  போர்க்கப்பல்களை பசிபிக் கடல் வழியாக ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

American war ship did war rehearsal at china ocean யூ.எஸ்.எஸ் தியேட்டர் ரூஸ்வெல்ட் மற்றும் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் என்ற ஆயுதம் தாங்கிய அந்த போர்க்கப்பல்கள் கடந்த ஒரு மாத காலமாக பசிபிக் கடல் வழியாக தென்சீனக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜூன்-21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகே அந்த கப்பல்கள் போர் ஒத்திகை நடத்தியுள்ளன. கப்பலில் இடம்பெற்றுள்ள அதிநவீனபோர் விமானங்களும், சர்வதேச கடற்பகுதியில் ஒருங்கிணைந்த போர் திறனை நிரூபிக்கும் வகையில்  ஒத்திகையில் ஈடுபட்டதாகவும்,  அமெரிக்காவின் தனித்துவமான திறனை அவைகள் வெளிபடுத்தியதாகவும்,  யூ.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் ஆகிய கப்பல்களின் மாலுமிகள் மற்றும் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

American war ship did war rehearsal at china ocean

விமான பாதுகாப்பு பயிற்சிகள்,  கடல் கண்காணிப்பு,  விமானப் போர்ப்பயிற்சி, தற்காப்பு பயிற்சி,  நீண்டதூர தாக்கும் திறன், ஒருங்கிணைந்த திட்டமிடல், உள்ளிட்ட பயிற்சிகளில் அமெரிக்க வீரர்கள்  நேர்த்தியுடன் ஈடுபட்டனர் என அமெரிக்க பசிபிக் கடற்படையின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் இந்த சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் ஒன்றாக பயிற்சி பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த சூழலில் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம்  எங்கள்  திறன்களை நாங்கள் மேம்படுத்திக்கொள்கிறோம் என்று ரியர் அட்மிரல் ஜேம்ஸ் கிர்க் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த பயிற்சி அமெரிக்காவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும்  ஸ்திரத்தன்மை, உறுதிபாட்டை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த செய்தி என அவர் கூறியுள்ளார். தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் உள்ளிட்ட மேற்கு பசிபிக் பகுதியில்  அமெரிக்க படைக்கு நீண்ட  அனுபவம் உண்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

American war ship did war rehearsal at china ocean

அமெரிக்காவின் இப்பெரிய இராணுவப் பயிற்சி சீனாவிற்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக அமைந்துள்ளது, மேலும் பிராந்தியத்தின் சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் அமெரிக்கா ரோந்துப் பணியில் தனது போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் ஈடுபடுத்தி வருவது சீனாவை கலக்கமடைய செய்துள்ளது. அமெரிக்க விமானம் தாங்கிய கப்பல்கள் பிலிப்பைன்ஸ் கடலை அடைந்த உடனேயே, மக்கள் விடுதலை இராணுவம் தனது ஆயுதத் தளத்தில் டி.எஃப் -21 டி மற்றும் டி.எஃப் -26 கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற கொடூரமான ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது, டி.எஃப் -26  மூலம் சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios