இந்த நாட்டில் மட்டும் 2 லட்சம் பேர் உயிரிழப்பர்...!! நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி தகவல்..!!
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என உலகின் முன்னணி நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என உலகின் முன்னணி நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது 74 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவையே இந்த வைரஸ் கொடூரமாக தாக்கியுள்ளது. இதுவரை அங்கு 20 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொறுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய வைத்துள்ளது.
இதை கட்டுபடுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை, கட்டுக்கடங்காத இந்த வைரஸ் மக்களைக் கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஹார்வர்டின் என்ற உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் ஜா, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடக்க நேரிடும் என்று கூறியுள்ளார். செப்டம்பர் மாதத்திலேயே இந்த எண்ணிக்கை எட்டப்படும் எனக் கூறியுள்ள அவர், அப்போதும் வைரஸ் தொற்று முடிவுக்கு வராது என தெரிவித்துள்ளார். மேலும் பல அமெரிக்க மாநிலங்களில் சமீபத்திய நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இது மேலும் அதிக கவலையை ஏற்படுத்துகிறது, ஆனால் அதற்குள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்போவதாக அதிகாரிகள் கூறுகின்றனர், குறிப்பாக நியூ மெக்ஸிகோ, உட்டா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல் புளோரிடா, ஆர்கன்சாஸ் போன்ற பகுதிகளில் கடந்த ஐந்து வாரங்களாக குறைந்திருந்த வைரஸ் தொற்று சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது, எனவே அமெரிக்காவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 20,66,508 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 5 லட்சத்து 45 ஆயிரத்து 690 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், அது வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளதாக கோவிட்-19 கண்காணிப்பு திட்டக் குழு தெரிவித்துள்ளது, முழு அடைப்புக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அதிக அளவில் மக்கள் வணிகம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் நோய்த்தொற்று அதிகரித்திருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மின்னபொலிஸில் போலீஸ் காவலில் மே 25-ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதிலிருந்து ஏற்பட்ட சமூக ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, அதிக நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என நோய்த்தொற்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அதற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை என கூறியுள்ளதுடன், ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது, ஆனால் அதனால் எந்த விதமான புதிய வைரஸ் தொற்றுகளும் உருவாகவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பலர் முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.