பருவகால தொற்று நோயாக மாறும் ஆபத்து..!! கொரோனா உலகை இரண்டாவது முறையும் தாக்கும், விஞ்ஞானி அதிர்ச்சி..

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியிக்கு தலைமை தாங்கும் அந்தோணி  ஃபாவுசி குளிர்காலம் நடந்துகொண்டிருக்கும் தெற்கு  ஆப்பிர்க்கா , மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் வேரூன்ற தொடங்கியுள்ளதாக கூறினார். 

american scientist warning about corona can 2nd round

பருவகால தொற்று நோயாக கொரோனா மாறுவதற்கு  வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான அந்தோணி பியூசி தெரிவித்துள்ளார்.  விரைவில் தடுப்பூசி கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார் , கொரோனா வைரஸ் உலக அளவில் வேகமாக பரவி வருகிறது சீனாவில் பெரும் மனிதத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,  இத்தாலி அமெரிக்காவில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது .   இந்நிலையில் உலகளவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியிக்கு தலைமை தாங்கும் அந்தோணி  ஃபாவுசி குளிர்காலம் நடந்துகொண்டிருக்கும் தெற்கு
ஆப்பிர்க்கா , மற்றும்ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் வேரூன்ற தொடங்கியுள்ளதாக கூறினார். 

american scientist warning about corona can 2nd round

தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் ,  ஐரோப்பிய நாடுகளிலும்  குளிர்காலம் வரவுள்ளன நிலையில் அந்த வைரஸ் தொற்று வீரியம் அதிகமாக அது உலகை இரண்டாவது முறையாக தாக்கக் கூடிய சூழல் உள்ளது ,  எனவே விரைவில் இந்த வைரசுக்கு தடுப்பூசி உருவாக்கியே தீரவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளு என்றார்.  தடுப்பூசியை சோதிக்கும் முயற்சியில் வெற்றி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் .  தடுப்பூசி கண்டறிவதில் மனித சோதனையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா சீனா ஆகிய இரு நாடுகளும் அவற்றை விரைந்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் உள்ளது என்றார் .  ஆனால் அந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் காலம்  ஆகும் என்ற நிலை உள்ளதால்  வைரஸை எதிர்ப்பதற்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது .  சில புதிய பழைய   மருந்துகளின் கூட்டு கலவையின் மூலம் இதற்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது .  ஹைட்ராக்ஸிகுளோரோகுயினும் இதில் அடங்கும் என்றார். 

american scientist warning about corona can 2nd round

இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் விரைவில் வெற்றி பெறுவோம் என்ற இந்த வைரஸ் இரண்டாவது சுற்றுவருவதற்கான  ஆபத்து இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.  இந்த வைரஸ் வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழல்களில் இருப்பதைவிட குளிர்ந்த காலநிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.  அதாவது குளிர்காலங்களில் காற்றில் ஈரப்பதம் நிலவுவதால் குளிர்ந்த காலநிலை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் என்பது காரணமாக சொல்லப்படுகிறது .  அதேபோல் வெப்பமான காலத்தில்  வைரஸ்கள் செயல்படாமல் சிதைந்து விடுகின்றன ,  ஏனெனில் வைரஸின் பாதுகாப்புக்காக உள்ள அதன் கொழுப்பு மேலடுக்கு  வெப்பத்தில் விரைவாக உலர்ந்துவிடுவதால் அது சிதைகிறது  என கூறியுள்ளார் .  அதற்காக நோய்த்தொற்றின் வீதம் குறையும் என்று அர்த்தமல்ல எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios