கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து தெனாவட்டாக பேசிய அமெரிக்கா..!! ஒரே நாளில் அந்தர் பல்டியடித்த ட்ரம்ப்..!!
" வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்... அவர் நன்றாகவே இருக்கிறார் என நான் நம்புகிறேன் " என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிங்காங் உன்னை வாழ்த்தியுள்ளார்.
" வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்... அவர் நன்றாகவே இருக்கிறார் என நான் நம்புகிறேன் " என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிங்காங் உன்னை வாழ்த்தியுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து அவர் கவலைக்கிடமாக உள்ளார் என செய்திகள் வெளியான நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் . வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்ணுக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம்மின் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதுகுறித்து வடகொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் தென் கொரியாவின் என்கே செய்தி நிறுவனம் அமெரிக்க செய்தி நிறுவனங்களின் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள தென் கொரியா, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வடகொரிய அதிபர் கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது , மவுண்ட் கும் காங் ரிசார்ட்டில் உள்ள ஒரு வில்லாவில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தி வெளியிட்டுள்ளது. அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கிம்மின் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வடகொரிய அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை . இந்நிலையில் இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம்மின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக சிஎன்என் ஊடகம் செய்திவெளியிட்டது
,
மேலும் கடந்த வாரம் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் மற்றும் அவரது தாத்தாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் இதனை தென்கொரியா மறுத்துள்ளதுடன் , கிம்மின் உடல் நிலை மோசமான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது . இதனைத் தொடர்ந்து வடகொரிய அதிபரின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கிம்மின் உடல்நிலை குறித்து எதிர்மறையான செய்திகள் வெளியாவது இது முதல்முறை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது, முன்னதாக இது குறித்து தெரிவித்து அமெரிக்கா, ஒரு வேலையை உடல்நிலை காரணமாக கிம் அரசியலில் இருந்தே ஓரம்கட்டபடும் நிலை வந்தாலோ அல்லது அவர் உயிரிழந்து விட்டாலோ சில உத்தேசமான ஏற்பாடுக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என அமெரிக்க முன்னணி தலைவர்கள் அவசர கதியில் கருத்து கூறி வந்தனர்.
வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் அமெரிக்க தலைவர்கள் கூறிவந்தநனர். இந்நிலையில் கிம்மின் உடல் நிலை தொடர்பாக இதுவரையில் வடகொரியா எந்த செய்தியும் வெளியிடவில்லை , இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கிம் ஜாங் உன்னுக்கு உடல் பிரச்சினையும் இல்லை என்றால் அவர் விரைவில் மீண்டு வருவார் , அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை , ஓன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் , அவர் நலம் அடைய நான் வாழ்த்துகிறேன் அவர் நன்றாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்... அவரைப்பற்றி தற்போது வெளிவரும் தகவல்கள் உண்மை இல்லை என்று நான் நம்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.