Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பீதியில் நடுங்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!! ஒரு வாரகாலமாக அவர் அந்த விஷயத்தை மட்டும் செய்யவே இல்லை.

கொரோனா வைரஸ் அச்சத்தால் எனது முகத்தை நான் கைகளால் தொட்டேன் ஒரு வாரம் ஆகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார் , அதை தான் மிகவும் மிஸ் செய்கிறேன் எனவும்  அவர் கிண்டலாக கூறியுள்ளார் ,

american president trump fear regarding corona and he dose't that particular activities
Author
Delhi, First Published Mar 6, 2020, 2:46 PM IST

கொரோனா வைரஸ் அச்சத்தால் எனது முகத்தை நான் கைகளால் தொட்டேன் ஒரு வாரம் ஆகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார் , அதை தான் மிகவும் மிஸ் செய்கிறேன் எனவும்  அவர் கிண்டலாக கூறியுள்ளார் ,  கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு  சுமார்  3 ஆயிரத்து 385 பேர் பலியாகி இருக்கிறார்கள். 

american president trump fear regarding corona and he dose't that particular activities 

சுமார் 98 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 89 நாடுகளில் பரவி இருக்கிறது . சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவுக்கு  முதலில் தினமும் உயிர் பலி அதிகரித்துக் கொண்டே சென்றது , பின்னர் நாளடைவில் அதன் வீரியம் குறைந்து வருகிறது. சீனா மக்களை நிலைகுலைய வைத்த கொரோனா வைரசின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது .  நேற்று மட்டும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் . 

american president trump fear regarding corona and he dose't that particular activities

இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.   சீனாவுக்கு வெளியே பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது வருகிறது . இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனை கூட்டம்  நடந்தது , இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார் .  இந்த கூட்டத்திற்கு பிறகு  செய்தியாளர்களிடம்    பேசிய அவர்,   வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டு ஒரு வாரம் ஆகிறது ,  அதை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என கிண்டலாக கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios