விமான நிலையத்தில் வந்த உடன் ஆச்சரியத்தில் உறைந்த ட்ரம்ப்..!! வரவேற்பால் உள்ளம் குளிர்ந்தார்...!!

சில மணி நேரங்களில் அனைவரும் சந்திப்போம் என தெரிவித்திருந்த நிலையில் அவர் முக்கிய அதிகாரிகளுடன்  இந்தியா வருகை  தந்துள்ளார் .  

american president trump came to India and very enthusiastic welcome to trump

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனிய டிரம்ப் மற்றும் அவரது  மகள் இவான்கா ட்ரம்பும்  ஆகியோர் இந்தியா வருகை தந்துள்ளனர் .  இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார் ,  அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார் .  அதுமட்டுமல்லாது தனது மனைவி மகள் என குடும்பத்துடன் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும் . 

american president trump came to India and very enthusiastic welcome to trump

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு 11:45  மணிக்கு   தனது குடும்பத்துடன் அவர் வந்தடைந்தார் அவருக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர் .  அமெரிக்க அதிபர் வந்திறங்கிய விமான நிலையத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . அமெரிக்கா -  இந்தியா ஆகிய இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில்  இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது , அத்துடன்  வர்த்தக விவகாரங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

  american president trump came to India and very enthusiastic welcome to trump

இரண்டு நாள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் ,  முன்னதாக இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்ரம்ப்  இந்தியா வருவதை  எதிர்நோக்கி உள்ளேன் ,  நாங்கள் வழியில் இருக்கிறோம் ,  சில மணி நேரங்களில் அனைவரும் சந்திப்போம் என தெரிவித்திருந்த நிலையில் அவர் முக்கிய அதிகாரிகளுடன்  இந்தியா வருகை  தந்துள்ளார் .  அவருக்கு இந்திய அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios