இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர்  விவகாரத்தை  தீர்த்துவைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேசியிருப்பது இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது .  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிரம்பை சந்தித்து பேசி உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா அதிபர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில்  உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது ,  இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள்  பங்கேற்று வருகின்றனர் .  மாநாட்டிற்கு இடையே  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார் .  அப்போது அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்ரம்புடன் விவாதித்தார். 

இச் சந்திப்புக்குப் பின் இருவரும்  கூட்டாக  செய்தியாளர்களைச் சந்தித்தனர் ,  அப்போது பேசிய ட்ரம்ப்,  இந்தியா-பாகிஸ்தான் இடையே  காஷ்மீர் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் ,   காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார் .  ஆகவே இருநாட்டிற்கும் இடையேயான உள்ள இந்த பிரச்சனையை தீர்க்க எங்களால் முடிந்த உதவி செய்வோம் என்றார் . பின்னர் பேசிய இம்ரான்கான்,   இந்தியாவுடனான பிரச்சனை பெரிய பிரச்சனை என்பதால், வேறு எந்த நாட்டினாலும் இதை தீர்க்க முடியாது என்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அமெரிக்கா தனது  பங்கை செலுத்தும்  என எப்போது நாங்கள் அமெரிக்காவை  நம்புகிறோம் என்றார். காஷ்மீர் விவகாரம்  இந்தியா பாகிஸ்தான் இடையேயான விவகாரம்,   அதுமட்டுமில்லாமல் அது உள்நாட்டு விவகாரம் என்பதால் அதில் அமெரிக்கா தலையிட முடியாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  சிறிது காலம் ஒதுங்கியிருந்த அமெரிக்கா. 

தற்போதைய இம்ரான்கான் சந்திப்பால் பாகிஸ்தானுக்கு அதரவாக  மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில்  குறித்து கருத்து தெரிவித்துள்ளது  இந்தியாவை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  ஒரே நேரத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவது போல அமெரிக்கா நடந்துகொள்வதுடன்,   பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு சாதகமாகவும் , இம்ரான்கானை சந்திக்கும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு சாதகமாகும் ட்ரம்ப்  கருத்து கூறி  அமெரிக்காவுக்கே உரிய நடக அரசியலை சிறப்பாக நடத்துகிறார்  என்பதையே அவரின் பேச்சு  தெளிவாக காட்டுகிறது .  ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின்னர் இதுவரையில் நான்காவது முறையாக காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்க முயற்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது