அமெரிக்க அதிபர வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான அயோவா  மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக  வாக்குகள் பெற்று  அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் குடியரசு கட்சி உறுப்பினர்களின் 95 சதவீத வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றுள்ளார் .  இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே மிக மூர்க்கத்தனமானவர்,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்கக்கூடிய அளவிற்கு  நிதானமில்லாதவர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார் டொனால்  ட்ரம்ப் என்றால் அது மிகையல்ல. எதேச்சதிகாரம், அதிகார துஷ்பிரயோகம் என அவர் மீது புகார்கள் நீண்டுகொண்டே போவதே இதற்கு காரணம். 

  

அதேபோல்  , தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக அமெரிக்க செனட்டில்  கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.   இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார் .  அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது .  இந்த தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதிபர்  ட்ரம்ப் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . இந்நிலையில்  ஜனநாயகக் கட்சியில்  12க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் . 

அமெரிக்கவில் உள்ள 50 மாகாணத்திலும்  அந்தந்த கட்சியின் சார்பில் தேர்தல் நடத்தி அதில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களே அந்த கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவர் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது . அவரே வரும் நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவார் ,  இந்நிலையில் அயோவா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த  வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் குடியரசு கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.  இது குறித்து பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் குடியரசு கட்சியின் 95% உறுப்பினர்களின் ஆதரவுடன் வேட்பாளராக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் . அவரே மீண்டும் அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது எனவும் அந்த பத்திரிக்கை  தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.