ட்ரம்பின் அதிக பிரசங்கி தனத்திற்கு மரண அடி.!! குளோரோகுயின் மாத்திரைகளால் பலர் உயிரிழந்த தாக அதிர்ச்சி..?
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையுடன் அசித்ரோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரையை கலந்து கொடுத்ததில், 113 நோயாளிகளில் இறப்பு விகிதம் 22 சதவீதமாக இருந்ததாக மருத்துவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர் .
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளால் பலன் எதுவும் இல்லை என்றும் அதனால் உயிரிழப்புகளே அதிகரித்துள்ளது எனவும் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன . இந்த தகவல் அமெரிக்காவை மட்டுமல்ல உலக நாடுகளையும் மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதுதான் இதற்கு காரணம். உலக அளவில் கொரோனா வைரஸுக்கு உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை எட்டியுள்ளது . உலக அளவில் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . அங்கு இதுவரை இந்த வைரசுக்கு 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவிலிருந்து , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வைரஸ் பரவியதுபோதே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்தார் . இந்நிலையில் அவருடைய பரிந்துரையை ஆரம்பத்தில் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஏற்க மறுத்தனர் , இந்த மாத்திரைகள் மனித உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பாக பார்வை கோளாறு , இதயபாதிப்பு, நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தனர் . ஆனாலும் இந்த மாத்திரைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது . இந்நிலையில் பலரும் அந்த மாத்திரைகள் நல்ல பலனைக் கொடுக்கிறது என கூறி வந்தனர் . இந்நிலையில் இந்த மருந்தால் நோயாளிகளுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை மாறாக அதிக அளவில் உயிரிழப்புக்கு இந்த மாத்திரைகள் காரணமாக இருந்துள்ளன என அதிர்ச்சி தகவலை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துமனை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெட்டரன் மருத்துவமனை இது குறித்து விரிவான ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது . அதாவது கொரோனாவுக்கு இதுவரையில் தடுப்பூசிகள் இல்லை என்பதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளது, இதில் வெட்டரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 97 பேருக்கு தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொடுத்ததில் அதில் 28% பேர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளாத 158 நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் சதவீதம் வெறும் 11% எனவும் , ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையுடன் அசித்ரோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரையை கலந்து கொடுத்ததில், 113 நோயாளிகளில் இறப்பு விகிதம் 22 சதவீதமாக இருந்ததாக மருத்துவர்கள் அதிர்ச்சிதெரிவித்துள்ளனர்
.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையுடன் அசித்ரோமைசின் மாத்திரைகளை கலந்து கொடுப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனது. அதுமட்டுமல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 368 ஆண் நோயாளிகளுக்கு இந்த மாத்திரையால் எந்த பலனும் கிடைக்க வில்லை எனவும் அந்த மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் இறப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக வும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர் . ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சுவாச பிரச்சினைக்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை என்றும் திட்டவட்டவாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் 30 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது இது பெரும்பாலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாத்திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது .