கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்ந்து போர்..!! கொரோனா குறித்து சீனா மீது பாய்ந்த அதிபர் ட்ரம்ப்..!!

கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் . கொரோனா வைரஸ் குறித்த தகவலை சீனா மறைத்ததால் உலக நாடுகள் பெரும் விலை கொடுத்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.

american president Donald trump criticized  china regarding corona

கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் . கொரோனா வைரஸ் குறித்த தகவலை சீனா மறைத்ததால் உலக நாடுகள் பெரும் விலை கொடுத்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது .  இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.  இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்  பேசிய அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கொரோனா குறித்து சீன முன்கூட்டியே தெரிவித்திருந்தால், 

american president Donald trump criticized  china regarding corona

உலகளவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றார் . கொரோனா குறித்த உண்மைகளை சீனா வெளியிடாததால் மிகப் பெரிய பாதிப்புகளை உலகம் சந்தித்து வருகிறது என விமர்சித்தார் .  இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 9 ஆயிரத்து 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது .  இந்த வைரஸ் உலகளவில் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதித்துள்ளனர்.  அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கூட இந்த கொரோனோ பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை .  உயிர் பலியையும் கட்டுப்படுத்த முடியவில்லை .  எனவே இது குறித்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப்,   ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம்,

american president Donald trump criticized  china regarding corona  

நாம் மட்டுமின்றி உலகமே இந்த போரில் ஈடுபட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தாலும் கூட உலகமே அதை தெரிந்து கொண்டுள்ளது என்றார் .  நிச்சயமாக அந்த எதிரியை வீழ்த்தியே தீருவோம் என அவர் உறுதிபட கூறினார்.   விரைவில் உலகில் பாதிப்பில்லாத நாடுகள் பட்டியலில் அமெரிக்காவையும் நிச்சயம் இடம் பெறச் செய்வேன் என்ற அவர்  இந்தப் போரில் நாம் வெற்றி பெற காலதாமதம் ஆவது நல்லது அல்ல என அவர் தெரிவித்தார் .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios