Asianet News Tamil

சீனா மீது ட்ரம்ப் பொருளாதார தடை..?? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம்..!!

 சீனா உடனடியாக மூட வேண்டும் .  அந்த சந்தை மூடப்பட்டதா என  60 நாட்களுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  நாடாளுமன்றத்தில் சான்றிதழ் அளிக்க வேண்டும் . 
 

american parliament have resolution about china
Author
Delhi, First Published May 14, 2020, 3:57 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணைக்கு சீனா ஒத்துழைக்காத பட்சத்தில் அதன் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா ஒன்று அமெரிக்க செனட் சபையில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எழுப்பும் கேள்விக்கு சீனா முறையாக பதில் அளிக்காவிட்டால் அதன் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க வேண்டும் ,  டொனால்ட் ட்ரம்ப் அதற்கான முழு அதிகாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட சரத்துகள் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன  . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் 140 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருப்பதாக கூறப்படுகிறது .  எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த வைரசால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  கிட்டத்தட்ட அமெரிக்காவில் மட்டும் சுமார்  14 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  கிட்டத்தட்ட அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  85 ஆயிரத்தை கடந்துள்ளது .  இதுவரை சுமார் 3 லட்சத்து 10 ஆயிரத்து 259 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் இன்னும் 10 லட்சம் பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  . 

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் கொரோனா பாதித்த நோயாளிகளும் , உயிரிழந்தவர்களின் சடலங்களும் அழுகைகளுமாகவே  காட்சி அளிக்கிறது .  இதிலிருந்து தப்பிக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தபோதிலும் பலன் பெரிய அளவில் இல்லை .  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்ப நாடுகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன  அதற்கடுத்து ரஷ்யா பிரிட்டன் ஆகிய நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன .  கொரோனா வைரசுக்கு   சீனாதான் காரணம் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடான ஜெர்மனியும் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டுகின்றன .  ஆஸ்திரேலியா சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது .  ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்குமே மசியாத சீனா  கொரோனாவுக்கும்  எங்களுக்கும் சம்பந்தமில்லை ,  அந்த வைரஸால் நாங்களும்  மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் .இயற்கையாக தோன்றிய ஒரு வைரஸை வைத்து  சீனாவுக்கு எதிராக அமெரிக்கா சதி வலை பின்னுகிறது என சீனா  குற்றம் சாட்டி வருகிறது .

  

இந்நிலையில் இதுதொடர்பான ஆராய்ச்சிகள் பல நடந்து வரும் நிலையில்  சர்வதேச வல்லுநர் குழுவை சீனாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.   ஆனால் சீனா தங்கள் நாட்டில் அதுபோன்ற எந்த விசாரணைக்கும் அனுமதி வழங்க முடியாது என மறுத்து விட்டது. இந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பணிப் போர் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது .  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட் சபையின் மூத்த எம்.பி.,யான லிண்ட்சே கிரஹாம், செனட் சபையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அதை மேலும் 7 உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர்.  அதாவது புதிதாக கொண்டுவந்துள்ள அந்த தீர்மானத்தில் ,  கொரோனா வைரஸ் எப்படி உருவானது  என்பது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள்  வைரஸ் தொடர்பாக எழுப்பும் சந்தேகங்களுக்கும் அல்லது பாதிக்கப்பட்ட  நாடுகளுடைய விசாரணைக்கும்  சீனா  முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .  அதுமட்டுமின்றி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியது என சொல்லப்படும் வுஹான் சந்தையை  சீனா உடனடியாக மூட வேண்டும் .  அந்த சந்தை மூடப்பட்டதா என  60 நாட்களுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  நாடாளுமன்றத்தில் சான்றிதழ் அளிக்க வேண்டும் . 

இல்லை என்றால்  சீனா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவதற்கான அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அளிக்கப்படும் அந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள சீன சொத்துக்களை முடக்குவது ,  சீன வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்துவது,  சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க பங்குச்சந்தையில்  தடை ,  சீனர்களுக்கான  விசா ரத்து , அமெரிக்காவில் சீன வர்த்தக நிறுவனங்களுக்கு தடை ,உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனது .  தீர்மானத்தை முன்மொழிந்த உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம்  கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வரும்  சீனாவுக்கு அழுத்தம்  தருவதன் மூலமாகவே அதனிடமிருந்து  தகவல்களை பெற முடியும் .  மனித சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக இருக்கும் வுஹான் சந்தையை  உடனே மூட வேண்டும் . இப்படி  சீனாவுக்கு கடுமையான அழுத்தம் தராவிட்டால் அது ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்காது .  சீன மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சதி காரணமாகவே அமெரிக்காவில் இந்தளவிற்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது . தற்போது உலகத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளுக்கும் சீனாவை பொறுப்பேற்க வைக்க  வேண்டும் என அவர் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார் . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios