பாதுகாப்புத்துறையில் கைகோர்த்த இந்தியா அமெரிக்கா...!! உச்சகட்ட அதிர்ச்சியில் சீனா- பாகிஸ்தான்...!!

நாட்டின் பாதுகாப்புக்காக  அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி உள்ளதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  கூறியிருந்த நிலையில்  அதிநவீன பாதுகாப்பு கருவிகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது . 

american India collaboration with defense - china and Pakistan have shacking

டெல்லியில் அமெரிக்கா இந்தியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 21 ஆயிரம் கோடிக்கான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தானது .  இதன்மூலம் பாதுகாப்புத் துறையில் இந்தியா அதி வல்லமை பொருந்திய நாடாக மாறும் நிலை உருவாகியுள்ளது .இந்தியா அமெரிக்காவுக்கு இடையேயான இந்த கூட்டு ஒப்பந்தம் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது .  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் , டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார் . 

 american India collaboration with defense - china and Pakistan have shacking

இருநாட்டு தலைவர்களும் பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து பேசினார் ,  பேச்சுவார்த்தையின் இறுதியில் வர்த்தகம் ராணுவம் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது.  அதன் ஒருபகுதியாக  இந்திய அமெரிக்க இடையே எரி சக்தி உள்ளிட்ட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின ,  அதேபோல் பாதுகாப்பு  ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் அதாவது  21,606 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது  .  இதன் மூலம் அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் எம்எச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் . 

american India collaboration with defense - china and Pakistan have shacking  

நாட்டின் பாதுகாப்புக்காக  அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி உள்ளதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  கூறியிருந்த நிலையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது .  அதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது .  எம்எச் 60 ரோமியோ வகையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தக்கூடிய சிறப்புகள் கொண்டது ஆகும் . நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த இந்த  ஹெலிகாப்டர் மூலம் கடற்படையை வலிமை படுத்த முடியும் .  அமெரிக்காவுடன் பாதுகாப்பு துறையில் இன்று செய்யப்பட்டுள்ள  ஒப்பந்தங்கள்  இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios