இத்தனைநாள் ட்ரம்ப் கொடுத்த பில்டப்பை சுக்கு நூறாக்கிய சுகாதாரத்துறை..!! வைரஸ் இயற்கையானது என வாதிடும் பௌசி..!

வௌவால்களது  வைரஸின் பரிணாம வளர்ச்சியையும் தற்போது உள்ள வைரசையும் ஒப்பிட்டு பார்த்தால் கொரோனா வைரஸ் செயற்கையானது அல்லது வேண்டுமென்றே  பரப்பப்பட்டதாகவும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் .

american health ministry adviser antony fouci  denied corona virus manufacturing

கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில் அந்த வைரஸ் இயற்கையானது தான் என நாட்டின் சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனியோ பௌசி கூறியுள்ளார் ,  இது அமெரிக்க அதிபரின்  கருத்திற்கு நேரெதிராக அமைந்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விரவி உள்ளது ,  உலக அளவில் இதுவரை  38 லட்சத்துக்கும்  அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உலகளவில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.65 லட்சமாக உயர்ந்துள்ளது .  இந்நிலையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இதுவரை அங்கு சுமார் 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது .   அதற்கடுத்த நிலையில் இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

american health ministry adviser antony fouci  denied corona virus manufacturing

உலகம் இந்த அளவிற்கு  பேரிழப்பை சந்தித்து வருவதற்கு சீன தான் காரணம் இந்த வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது சீனாவிலுள்ள வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த  வைரஸ் கசிந்தது என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார் , அதுமட்டுமின்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீனாவில் இருந்துதான் கரோனா வைரஸ் கசிந்தது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் அதிகம் உள்ளது என கூறிவருகிறார் .  ஆனால் இந்த  குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அமெரிக்காவின் சுகாதார மற்றும் புற்றுநோய் நிபுணர் அந்தோணி பௌசி கொரோனா வைரஸ்  இயற்கையான ஒன்று என கூறியுள்ளார் . பௌசி அமெரிக்காவின் தொற்றுநோயியல் நிபுணர் மட்டுமின்றி அந்நாட்டின் சுகாதாரத்துறையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராகவும்,  மதிப்பு  மிக்கவராகவும் கருதப்படுகிறார்.  அமெரிக்காவுக்கு சிறந்த சுகாதார ஆலோசகராக இருந்து வரும் அவர் கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியதாக தான் நம்பவில்லை என தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

american health ministry adviser antony fouci  denied corona virus manufacturing

வௌவால்களது வைரஸின் பரிணாம வளர்ச்சியையும் தற்போது உள்ள வைரசையும் ஒப்பிட்டு பார்த்தால் கொரோனா வைரஸ் செயற்கையானது அல்லது வேண்டுமென்றே  பரப்பப்பட்டதாகவும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் .  அதுமட்டுமின்றி கடந்த வாரம் அமெரிக்க உளவுத்துறை கொரோனா  பரவல் விலங்குகள் தொடர்பின் மூலம் ஏற்பட்டதா அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்வதாக கூறியிருந்தது ,  சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரப்பப்படவில்லை என்பதை முற்றாக நிராகரித்தது என பௌசி மேற்கோள் காட்டியுள்ளார் .  உலக சுகாதார நிறுவன தலைவர் மரியாவான் கெர்கோவ்  திங்களன்று நடந்த மாநாட்டில் கொரோனா வைரஸின் 15,000 முழு மரபணு வரிசை முறைகள் கிடைத்துள்ளது ,  நாங்கள் பார்த்த எல்லா ஆதாரங்களில் இருந்தும் இந்த வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது என்று உறுதியாகக் கூறினார் , கொரோனா வைரஸ்கள் பொதுவாக வவ்வால்கள்  தோன்றினாலும் வான் கெர்கோவ் ,  ரியான் இருவரும்  கொரோனா பரப்பும் வைரஸ் எவ்வாறு மனிதர்களை கடந்து சென்றது என்பதை கண்டுபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார் . 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios