அண்டைநாடுகளை கொடுமை படுத்த கொரோனாவை பயன்படுத்தியது சீனா..?? பகீர் குற்றசாட்டை வெளியிட்ட மைக் பாம்பியோ..!!

 மருத்துவ பொருட்களை சீனா அனுப்பி வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் ,  சில சமயங்களில் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களில் இருந்து அவைகள் வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார் . 
 

american foreign secretary mike bambio accused china

அண்டை நாடுகளை கொடுமைப் படுத்துவதற்காக  சீனா கொரோனாவைரசை பயன்படுத்திக் கொண்டது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மீண்டும் சீனா மீது பாய்ந்துள்ளார்.   சீனா மருத்துவ பொருட்கள் வழங்குவதை வரவேற்ற அதேநேரத்தில் அவர் சீனாவை இவ்வாறு விமர்சித்துள்ளார்  . கொரோனாவால், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து  குற்றம்சாட்டி வருகிறது .  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து கசிந்து இருக்கக் கூடுமென சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.  இது  அமெரிக்கா சீனா இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது . இந் நிலையில் அமெரிக்காவின் மூத்த முன்னணி அதிகாரிகள் தொடர்ந்து சீனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

american foreign secretary mike bambio accused china

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ளார் சீனா அண்டை நாடுகளை கொடுமை படுத்துவதற்கு வைரஸை பயன்படுத்திக்கொண்டது  என குற்றம் சாட்டியுள்ளார் .  உலக சுகாதார அமைப்பின் விதிமுறை மீறி சீனா நடந்து கொண்னுள்ளது. குறிப்பாக  வைரஸ் பரவலை சரியான நேரத்தில் உலகுக்கு அறிவிக்க அத் தவறிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார் .  அதுதான் இந்த உலகம் சந்தித்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும்,   புதிய வைரஸ் மாதிரிகளை பரிசோதனைசெய்வதை  சீனா நிறுத்தி உள்ளதாகவும் ,  பழைய மாதிரிகளை அது அழித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார் .  இதனால் இந்த நோயின்  பரிமாண வளர்ச்சியை கண்காணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாம்பியோ தெரிவித்துள்ளார்.  அதேநேரத்தில் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு ஆதரவாகவே  செயல்பட்டது ,  சீனாவில் வைரஸ் தோன்றியபோதே  உலகிற்கு அதை சொல்லாமல் மூடி மறைத்து விட்டது

american foreign secretary mike bambio accused china

இதனால் நோய் ஆபத்தை உலக நாடுகள் அறிந்து கொள்ள முடியாமல் போனது என தெரிவித்துள்ளார் .  கொரோனாவால்  சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சீனா வெளியிடுவதற்கு  மறுத்துவிட்டது  உலக சுகாதார நிறுவனமும் அதை தட்டிக்கேட்காமல்  சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது ,  உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்,  வுஹான் வைராலஜி ஆய்வுகூடத்தின் பாதுகாப்பு தரத்தை  கவனிக்க , பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டார்  ,  தனது முழு திறனையும் பயன்படுத்த அவர் தவறி விட்டார்  என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு மருந்து பொருட்களை அனுப்பி வைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாம்பியோ.  மருத்துவ பொருட்களை சீனா அனுப்பி வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் ,  சில சமயங்களில் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களில் இருந்து அவைகள் வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 

american foreign secretary mike bambio accused china

அனைத்து சர்வதேச வர்த்தக விதிகளின்படி ஒப்பந்த கடமைகளின் படி தொடர்ந்து எங்களுக்கு அந்த மருந்து பொருட்களை  வாங்குவதற்கும் , எங்களுக்கு அதை விற்பனை செய்வதற்கும் வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என தெரிவித்துள்ளார் .  மைக் பாம்பியோவை போலவே வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவரோ சீனாவில் கடுமையாக தாக்கியுள்ளார் , அதாவது  சீனா ஆரம்பகாலக் ஒரு நோய் தடுப்பு பற்றிய தரவுகளை நிறுத்தி வைக்ககூடும் ஏனெனில் ஒரு தடுப்பூசி உருவாக்கவும் அதன்  வணிகப் போட்டியை வெல்லவும் அது விரும்பியது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios