ஒரே நாட்டில் 63,000 பேர் பலி..!! உயிர் பயத்தில் கதறும் அமெரிக்க மக்கள்..!!

கொரோனாவால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 63 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது . 

american death rate very high 63 thousand people died

கொரோனாவால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 63 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது .  இது அமெரிக்காவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளையுத் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது . இதனால் இதுவரை அமெரிக்காவில்  10 லட்சத்து 95 ஆயிரத்து 304  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .அதில் சுமார் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் . சுமார்  8 லட்சத்து 75 ஆயிரத்து 696 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  அதுமட்டுமின்றி 15 ஆயிரத்து 226 பேர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் .

american death rate very high 63 thousand people died 

அதேபோல் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே மக்கள் மத்தியில் அதிக பரிசோதனை செய்த நாடாக உள்ளது ,  இதுவரையில் சுமார்  63 லட்சத்து 91  ஆயிரத்து 887 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .  ஆனாலும் அமெரிக்காவில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதுவரையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகளை என அமெரிக்கா விதித்தும்  வைரஸ் தொற்று குறைந்தபாடில்லை ,  அதேநேரத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது ,  10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதில்  இதுவரை 63 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளனர் . இது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலையச் செய்துள்ளது , ஏற்கனவே அமெரிக்காவில் நோய் தாக்கம் குறித்து  கணிப்பு வெளியிட்டிருந்த அமெரிக்க சுகாதார அளவீட்டு நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்தை நெருங்கும் எனறும். 

american death rate very high 63 thousand people died

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று ஆயிரம் பேர் இறப்பர் என எச்சரித்திருந்தது , அதுமட்டுமின்றி அமெரிக்காவில் மொத்தம்  22லட்சம் பேர் இறப்பர் என வேறொரு கணிப்பு தெரிவித்திருந்தது  ஆனால் இதையெல்லாம் மறுத்த  அதிபர்,  டிரம்ப் பலி எண்ணிக்கை  ஒரு லட்சம் முதல் 2.4 லட்சம் வரை இருக்கக்கூடும் என தெரிவித்திருந்தார் ,சில நாட்களுக்கு முன்பு பேசிய அவர், அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது எனவே மொத்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டப்போவதில்லை என தெரிவித்திருந்தார் ,அவர் இப்படி பேசிய  சில நாட்களிலேயே  உயிர்பலி 60 ஆயிரத்தை கடந்து தற்போது 63 ஆயிரத்தை எட்டியுள்ளது .  அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில்  நோய்த்தொற்று  ஏற்படுகின்ற  அளவிற்கு குணமடைபவர்களின் எண்ணிக்கை இல்லை.  அதே நேரத்தில் மருத்துவமனையில் அதிகம் பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அதில்  ஐசியூவில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது . 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios