Asianet News TamilAsianet News Tamil

பொறுமையாய் இருந்த அமெரிக்காவுக்கு கடவுள் கொடுத்த நல்ல செய்தி..!! நிம்மதி பெருமூச்சு அடைந்த உலக மக்கள்..!!

அந்த அடிப்படையில் கடந்த  இரண்டு வாரத்துக்கு மேலாக அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாள் ஒன்றுக்கு ,  2000 முதல் 2500 வரை பதிவாகி வந்தது . 

american death rate reducing  come down
Author
Delhi, First Published Apr 28, 2020, 7:17 PM IST

மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கொடூர தாண்டவம் ஆடி வரும் நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது , கடந்த 10 தினங்களுக்கு மேலாக பலி எண்ணிக்கை  நாளொன்றுக்கு குறைந்தது 2000 முதல் 2500 வரை பதிவாகி வந்த நிலையில் , நேற்று பலி எண்ணிக்கை 1157 என பதிவாகியுள்ளது .  இது அமெரிக்க மருத்துவர்கள் மத்தியில் சற்று தன்னம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது .  கடந்த ஆண்டு டிசம்பர்  மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது , சுமார் 150க்கும் மேற்பட்ட  நாடுகளில் கொரோனா வைரஸ் தன் கொடூர கருத்தைப் பரப்பி உள்ளது .  அமெரிக்கா இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் ஜெர்மனி பிரிட்டன் ரஷ்யா ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

american death rate reducing  come down

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே தற்போது கொரொனாவின்  மையமாக மாறியுள்ளது .  இங்கு கொத்துக் கொத்தாக மக்கள் கொரோனா  தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் ,  இந்நிலையில் அமெரிக்காவின் மட்டும் இதுவரை 10 லட்சத்து 10 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  கிட்டத்தட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 803 ஆக உயர்ந்துள்ளது .  மொத்தத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 162 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் .  மருத்துவமனையில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 542 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .  சுமார் 14 ஆயிரத்து 186 பேர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் . 

american death rate reducing  come down

இதுவரை அமெரிக்கா முழுவதும் 56 லட்சத்து 96 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது . இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நோய்த்தொற்றும் உயிரிழப்பும் அமெரிக்காவில் அதிகரித்துள்ள நிலையில் ,  அந்நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது .  ஏற்கனவே கணிக்கப்பட்ட படி ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை இருக்கும் என அமெரிக்கா சுகாதாரத்துறை அளவீட்டு நிறுவனம் எச்சரித்திருந்தது , அந்த அடிப்படையில் கடந்த  இரண்டு வாரத்துக்கு மேலாக அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாள் ஒன்றுக்கு ,  2000 முதல் 2500 வரை பதிவாகி வந்தது . 

american death rate reducing  come down

இதன் காரணமாக ஒரு சில நாட்களிலேயே அங்கு பலி எண்ணிக்கை  மின்னல் வேகத்தில் உயர்ந்தது .இது அமெரிக்கமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும்  ஏற்படுத்தி வந்த நிலையில்  நீண்ட நாட்களுக்கு பின்னர் அதன் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது .   அதாவது நேற்று உயரிழந்தவரிகளின் எண்ணிக்கை வெரும் 1,157 என பதிவாகி உள்ளது.  இதை மற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது பாதி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் இதன் எண்ணிக்கை மேலும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது .  அதாவது ஏப்ரல் 21ஆம் தேதி அதிகபட்சமாக சுமார் இரண்டாயிரத்து 683 பேர் உயிரிழந்த நிலையில் அது படிப்படியாக குறைந்து ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்கில் 1157 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios