ஐயோ ஆண்டவா... இது யார் செய்த பாவம்...? அமெரிக்காவை அழிக்காமல் இது போகது போல..!!
தற்போது ஒரு காய்ச்சல் பருவகாலம் முடிந்துவிட்டதால் நாம் இதை சமாளிக்க முடிந்திருக்கிறது . இதே குளிர்கால காய்ச்சல் பருவத்தின் உச்சத்தில் வந்திருந்தாள் இதை சமாளிப்பது மிக மிக மிக கடினமாக இருந்திருக்கும் என அவர் கூறியுள்ளார் .
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவல் இருக்கும் என அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் , அதை சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு எச்சரித்துள்ளார் . அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இந்நிலையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டியுள்ளது . உலக அளவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது
.
அமெரிக்காவில் மட்டும் இந்த வைரசுக்கு 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 82 ஆயிரத்து 973 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், 14 ஆயிரம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் அந்த வைரசை கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை , அதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் ஒரு சில மாகாணங்களில் வைரஸ் தாக்கம் தீவிர நிலையிலிருந்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது . இதனால் அமெரிக்காவில் சில மாகாணங்கள் ஊரடங்கு தளர்த்தி உள்ளன.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவில் நோய்கள் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு , தற்போது அமெரிக்கா கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . இது இயல்பாகவே காய்ச்சல் பருவம் என்பதால் கொரோனா அதிக ஆபத்தை சந்திக்க வேண்டியிருந்தது . நாட்டிலேயே நியுயார்க் நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது , அதற்கு இணையாக கலிபோர்னியா நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களிலும் இறப்பு எண்ணிக்கை கடந்த வாரங்களில் அதிகரித்தது . தற்போது உள்ள சூழ்நிலையை ஒரளவுக்கு சமாளித்து கடந்து வந்தாலும் அடுத்து வரவுள்ள குளிர்காலத்தில் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் எனவே இப்போது நாம் சந்திப்பதைவிட அதிகம் போராட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் .
அமெரிக்காவில் ஏற்படவுள்ள இரண்டாவது வைரஸ் அலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார் . ஒரே நேரத்தில் பருவகால காய்ச்சலையும் கொரோனா வைரஸ் தொற்றையும் எதிர்கொள்ள அமெரிக்கா அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் . அப்போது அதிக அளிவிலான மக்கள் பாதிக்க வாய்ப்புள்ளது , மருத்துவமனை படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். தற்போது ஒரு காய்ச்சல் பருவகாலம் முடிந்துவிட்டதால் நாம் இதை சமாளிக்க முடிந்திருக்கிறது . இதே குளிர்கால காய்ச்சல் பருவத்தின் உச்சத்தில் வந்திருந்தாள் இதை சமாளிப்பது மிக மிக மிக கடினமாக இருந்திருக்கும் என அவர் கூறியுள்ளார்
.
அமெரிக்க மாகாணங்கள் ஊரடங்கை தளர்த்துவதை எச்சரித்துள்ள அவர், அதேநேரத்தில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் சமூக தொலைவு முக்கியமானது என்று வலியுறுத்தினார் , மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் தற்போது ஆங்காங்கே நடந்து வரும் ஆர்பாட்டங்களால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என அவர் கூறினார் . கொரோனா வைரஸ் உள்ளவர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண சோதனைகளை முடுக்கிவிட வேண்டும் என மாநில அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் . மீண்டும் அமெரிக்காவில் கொரோனா இரண்டாவது அலை வரும் என்ற அறிவிப்பு அமெரிக்கா மக்களை கதிகலங்க வைத்துள்ளது.