அமெரிக்கர்களின் ரத்தத்தை உறைய வைத்த ஆய்வு முடிவு.!! ஆகஸ்டு மாதத்திற்குள் 1.30 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு
அமெரிக்காவில் சுமார் 31 மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் காரணமாக தற்போது அது நோய் தொற்றாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது எனவும் ,
கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது , இந்த தகவல் அமெரிக்க மட்டுமல்லாது உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, உலக அளவில் 36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.52 லட்சமாக உயர்ந்துள்ளது இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அமெரிக்காவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . அங்கு மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் சுமார் 49 ஆயிரத்து 552 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் , அதில் பலர் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் , இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதுமட்டுமின்றி நாளொன்றுக்கு சராசரியாக 2000 முதல் 2500 பேர் உயிரிழந்து வருகின்றனர் , ஆகவே அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இதை கணித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது , அதுமட்டுமின்றி அமெரிக்காவில் சுமார் 31 மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் காரணமாக தற்போது அது நோய் தொற்றாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது எனவும் ,
மக்களிடம் தொடர்புகள் அதிகரித்திருப்பதால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரித்துள்ளது எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்கா என்ன செய்வது என புரியாமால் தவித்து வருகிறது , அதாவது ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணிப்பை வெளியிட்ட வாஷிங்டன் சுகாதார அளவீட்டு நிறுவனம் , அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் கால கட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது எனவும் ஆகஸ்டு மாதத்திற்குள் சுமார் 81 ஆயிரம் பேர் உயிரிழக்கவாய்ப்புள்ளது எனவும் எச்சரித்திருந்த நிலையில் , தற்போது அதே ஆகஸ்டு மாதத்திற்குள் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறப்பர் என கூறி இருப்பது மேலும் இதயத்துடிப்பை அதிகரிக்க வைத்துள்ளது.