வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாத காரியம் என அமெரிக்‍க தேசிய உளவு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ள நிலையில், வடகொரியா குறித்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அமெரிக்‍கா குறிப்பிட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அமெரிக்‍க தேசிய உளவு பிரிவின் தலைவர் James Clapper, நியூயார்க்‍கில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வடகொரிய மக்‍கள், மனநிலை பிறழ்வு ஏற்பட்ட நிலையில் இருப்பதாகவும், அணு ஆயதங்களைக்‍ கைவிட அவர்களை ஒப்புக்‍கொள்ள வைப்பது கடினம் என்றும் குறிப்பிட்டார்.

அம்மக்‍களின் மனப்போக்‍கில் மாற்றம் ஏற்படாது என்பதை தாம் தெளிவாக உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது எனவும் தேசிய உளவு பிரிவின் தலைவர் James Clapper தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், வடகொரியா குறித்த அமெரிக்‍காவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்‍க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் John Kirby குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை அடுத்து, ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை கூடிய விரைவில் தென்கொரியாவில் நிறுவ அமெரிக்‍கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.