சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 நிறுவனங்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா!!

சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. 

America took action action against six companies that acted in support of china

சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் வான்பரப்பில் சீனாவின் உளவு பலூன் பறந்ததை கண்ட அமெரிக்கா அதனை சுட்டு வீழ்த்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது எனவும் சீனா விளக்கம் அளித்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த அமெரிக்கா, அது உளவு பலூன் தான் என்று உறுதியாக உள்ளது.

இதையும் படிங்க: தொடரும் சிரியாவின் துயரம்... இருவேறு தாக்குதல்களில் 68 பேர் பலி

மேலும் அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் உலகம் முழுவதும் 5 கண்டங்களில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி உளவு பலூன்களை பறக்கவிடும் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக பல சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அமெரிக்க அரசு அந்த 6 சீன நிறுவனங்களுக்கு தடைகளை விதித்துள்ளது.

இதையும் படிங்க: பல்கேரியா வந்த கண்டெய்னரில் 18 ஆப்கன் அகதிகள் சடலமாக மீட்பு

அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததற்கு எதிர்வினையாற்றும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அதன்படி, 5 சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆய்வு மையம் என 6 சீன நிறுவனங்களை அமெரிக்க வர்த்தக துறை தடை செய்துள்ளது. இதனால், சிறப்பு உரிமம் இன்றி அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களை சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios