Afghan migrants: பல்கேரியா வந்த கண்டெய்னரில் 18 ஆப்கன் அகதிகள் சடலமாக மீட்பு

கண்டெய்னர் லாரி ஒன்றில் துருக்கி வழியாக பல்கேரியாவில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் 18 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Bulgarian police find 18 Afghan migrants dead in abandoned truck

பல்கேரியா நாட்டில் தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை கண்டெய்னர் லாரி ஒன்று ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்தது. அந்நாட்டு காவல்துறை சந்தேகத்தின் பேரில் அந்த லாரியைத் திறந்து பார்த்து சோதனையிட்டது.

லாரி கண்டெயினரைச் சோதனையிட்டபோது அதற்குள் 52 பேர் அடைந்து கிடைந்தது தெரியவந்தது. அவர்களில் 18 பேர் உயிரிழந்து சடலமாகக் கிடைத்துள்ளனர். மீதம் இருந்த 34 பேரும் உயிருக்குப் போராடும் மோசமான நிலையில் இருந்தனர். காவல்துறை அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பல்கேரிய காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள் எல்லோருமே ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த அகதிகள் என்றும் அவர்கள் துருக்கியில் வழியாக பல்கேரியாவுக்குள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.

Bulgarian police find 18 Afghan migrants dead in abandoned truck

Syria Attacks: தொடரும் சிரியாவின் துயரம்... இருவேறு தாக்குதல்களில் 68 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் அடைக்கலம் தேடும் நோக்கத்துடன் அவர்கள் வந்த அவர்களுக்கு உதவியதாகவும் 4 பேரை பல்கேரிய காவல்துறை கைது செய்திருக்கிறது.

போர், பஞ்சம், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளை விட்டு வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்ந்து அகதிகளாக வேறு நாடுகளில் அடைக்கலம் தேடி வருகிறார்கள். தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும், ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இருந்தும் அதிகமான மக்கள் வெளியேறுகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர். பலர் துருக்கியில் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அப்படிச் செல்லும்போது அந்நாட்டு ராணுவத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

Flesh-Eating Parasite: இளைஞரின் கண்ணைத் தின்ற ஒட்டுண்ணிகள்! காண்டாக்ட் லென்ஸ் அணிந்ததால் நேர்ந்த விபரீதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios