Asianet News TamilAsianet News Tamil

"இந்திய ராணுவத்துக்கு உதவ நாங்க ரெடி" - கை கொடுக்கும் அமெரிக்கா!!!

america ready to help indian army
america ready to help indian army
Author
First Published Aug 14, 2017, 10:01 AM IST


இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த, அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என அமெரிக்க ராணுவ தளபதி ஹாரிஸ் அறிவித்துள்ள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்தியா - அமெரிக்கா இடையே, நீண்ட நாட்களாக ராணுவ ஒத்துழைப்பு இருந்து வருகிறது. 

போர் விமானங்கள், ராடார்கள், பீரங்கிகள் என, ராணுவத்திற்கு தேவையானவற்றை, அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா வாங்கி வருகிறது. 

america ready to help indian army

இந்நிலையில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு, உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தளபதி, ஹாரிஸ் கூறியதாவது: அமெரிக்காவிடம் இருந்து, ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ராணுவ தளவாடங்களை, இந்தியா வாங்கி வருகிறது. இருநாடுகளும் இணைந்து, கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த, அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். தொழில்நுட்ப உதவிகளையும், ஆலோசனைகளையும் தர தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios