அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் - 264... டிரம்ப் 214... புலம்பலில் நீதிமன்றம் சென்ற டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ள நிலையில், தேர்தலில் முறைகேடு என டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
 

America president Donald Trump case filed in court

உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் 270 என்ற தேர்வாளர் வாக்குகளைப் பெறுவரே அமெரிக்க அதிபராக முடியும். இதுவரை வெளியான முடிவுகளில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்வாளர் வாக்குகளைப் பெற்றுள்ளார். குடியரசுக்கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்டு ட்ரம்ப் 214 தேர்வாளர் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். வெற்றிக்கு அருகே ஜோ பைடன் இருந்தாலும் வெற்றியாளர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை.

America president Donald Trump case filed in court
இந்தத் தேர்தலில் புளோரிடா, டெக்சாஸ், டென்னஸி, விர்ஜீனியா போன்ற மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பைடன் வாஷிங்டன், கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மிச்சிகன் போன்ற மாகாணங்க்ளைப் கைப்பற்றியுள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் நீதிமன்றம் சென்றதால், இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

America president Donald Trump case filed in court
தற்போதைய நிலையில் முன்னிலையில் இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், தேர்தல் முடிவுகள் முழுமையாக் வெளியாகும் வரை பொறுமை காக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios