அமெரிக்‍காவில் கடும் பனிப்புயல் : இயல்பு வாழ்க்‍கை பாதிப்பு!

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் வீசிய பனிப்புயலால், மின்சாரம் துண்டிக்‍கப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனினும், அங்குள்ள பனிக்குவியலில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

வடமேற்கு அமெரிக்காவில் உள்ள Pennsylvania மாகாணத்தில் கடும் பனிப்புயல் வீசியது. இதன்காரணமாக கனமழை பெய்வது போல், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்‍கு அடர்ந்த பனி கொட்டியது. இதனால் மின்தடை ஏற்பட்டு நகரமே இருளில் மூழ்கியது. சாலைகளில் 8 சென்டிமீ்ட்டர் அளவுக்கு பனி மூடியிருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்ப்படுத்தும் நடவடிக்‍கையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கடும் புனிப்புயலால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பனிக்‍குவியல்களின் மேல்நின்று சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக விளையாடியும், ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசியும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகின்றனர்.