இதற்காகத்தான் சுலைமானியை போட்டுத்தள்ளினோம்...!! அமெரிக்கா ஐநாவிடம் சொன்ன அதிரடி விளக்கம்...!!
தற்காப்புக்காக சுலைமானி கொன்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது .
எவ்வித நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், தற்காப்புக்காகவே சுலைமானியை கொன்றதாகவும் அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே உக்ரைன் விமானம் வெடித்து சிதறியதற்கு ஈரான் ஏவுகணைத் தாக்குதலே காரணம் என கனடா குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த வாரம் ஈராக்கில்அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமனி கொல்லப்பட்டார் இதனையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இது மூன்றாம் உலகப் போர் ஏற்பட காரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சமும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது . சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு காரணம் கருதி ஈரானுடன் எந்த நிபர்ந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் தெரிவித்துள்ளார் . தற்காப்புக்காக சுலைமானி கொன்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ளது .
அதேபோன்ற தற்காப்புக்காகவே அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தூதர் மஜித் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் உக்ரைன் நாட்டில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்துச் சிதறியுள்ளது, இதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது . அதேவேளையில் விமானத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பதில் கிடைக்கும் வரை இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.