மெரிக்க  முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகள் தன் ஆண் நண்பருடன் உல்லாசமாக வளம்வரும்  புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு எளிமையாகவும் மக்கள் மத்தியில் நெருக்கமாகவும் வலம்வந்த அதிபர் என்ற பெருமை அவருக்கு உண்டு , உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் விரும்பக்கூடிய தலைவர்களின் பட்டியலில் ஒபாமாவுக்கு எப்போதும் முதலிடம் உண்டு , ஆனால் அவரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய  மகள் மாலியா ஆன், நடவடிக்கைகள் அமைந்துள்ளது . 

ஒபாமாவின் ஆதரவாளர்கள்  மத்தியில்  இது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  ஒபாமாவுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள்   மாலியாவுக்கு  21 வயது  ஆகிறது ,  இந்நிலையில் அவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.   அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் மாலியா ஆன்  சிகரெட்  போதை பொருள் பயன்படுத்துவதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன .  இந்நிலையில் அவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடி வருவதுடன் ,  விடுமுறையின் கடைசி நாளன்று லண்டனிலுள்ள உள்ள  போதைப்பொருள் கேளிக்கை விடுதிக்கு மாலியா ஆன்,  சென்ற புகைப்படங்களும் வைரலாகி வருகிறது .  இதில் ஒபாமாவின் மகள் மாலியா ஆன்,  தனது ஆண் நண்பருடன்  மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்றபடி அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்துள்ள காட்சிகளும். 

தனது ஆண் நண்பருடன் சிகரெட் புகைக்கும் புகைப்படம்  மற்றும் ஆண் நண்பரை  கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் என விதவிதமான புகைப்படங்கள் இணையதளத்தில்  வெளியாகியுள்ளன.  இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற முன்னாள் அதிபர் ஒபாமாவும்  அவரது மனைவி  மிக்கேலும் எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் . மாலியா ஆன்னுக்கு  21 வயதாகும் நிலையில்  அவருடைய வாழ்க்கையை அவர் தேர்வு செய்யும் உரிமை அவருக்கு உள்ளது மேலும் தன்னுடைய ஓய்வு காலத்தை எப்படி கழிக்க வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் பெற்றோர்கள் தலையிடுவது சரியல்ல அவர்களின் விருப்பத்தை மகள் மீது  திணிப்பதும் சரியாகாது என பலர் மாரியா ஆனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.