சீனாவை வெறி ஏற்றும் அமெரிக்கா.. நாடுகடந்த திபெத் பிரதமரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அதிரடி..!!
கடந்த சில ஆண்டுகளாகவே செங்கே அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் விளைவாகவே இது கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அங்கிகரிப்பு சீனா-அமெரிக்கா மற்றும் சீனா-திபெத் இடையேயான உறவை பதற்றம் அடைய வைத்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக திபெத் பிரதமரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா- சீனா இடையேயான உறவை மேலும் மோசமாகக்கூடும் என கூறப்படுகிறது. திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியென தொடர்ந்து சீனா திபெத் மீது உரிமை கொண்டாடி வருவதே அதற்கு காரணம் ஆகும்.
ஆனால் திபெத் மக்கள், திபெத் என்பது தனிநாடு எனவும் ஒருபோதும் சீனாவின் ஆதிக்கத்தை திபெத் ஏற்றுக்கொள்ள மாட்டாது எனவும் கூறி வருகின்றனர். ஆனாலும் சர்வதேச நாடுகள் திபெத்தை தனிநாடாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. அதேபோல் அந்நாட்டின் மதகுருவான தலாய் லாமா சீனாவின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். நாடுகடந்த திபெத் அரசாங்கம் இந்தியாவின் தர்மசாலா நகரில் அமைத்து திபெத்தை ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாதுகாப்புடன் இங்கிருந்தபடியே திபெத் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தலாய்லாமா உள்ளிட்ட திபெத் தலைவர்கள் திபெத்தை ஆதரிக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவிகளை நாடி வருகின்றன.
ஆனாலும்கூட அந்நாடுகள் திபெத்தை அங்கீகரிக்க மறுத்து வந்தன. ஆனால் விடாமுயற்சியுடன் திபெத் மக்கள் தொடர்ந்து சீனாவை எதிர்த்து போராடி வருகின்றனர். இப்படி சீனாவுக்கும் திபேத்துக்குமான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் திபெத்தின் நாடுகடந்த அரசின் புதிய பிரதமராக கடந்த 2011ம் ஆண்டு லோப்சங் செங்கே பதவியேற்றார். சீனாவின் குடியேற்றத்துக்கு எதிராக போராடுவதே தனது தலையாக கடமை என அவர் சூளுரைத்தார். ஆனாலும் திபெத்திய நாடுகடந்த அரசை இதுவரை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் செங்கே கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி வந்தார். அவர்களை ரகசியமாக சந்தித்து அவ்வப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். அமெரிக்காவின் குடியரசு கட்சி தலைவர்களுடனும் உரையாடி வந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கையில் சற்று மாற்றம் தென்பட தொடங்கியுள்ளது. அதாவது கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் திபத் பிரதமர் செங்கேவை வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு அமெரிக்க அழைத்துள்ளது.
இதனால் நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை அமெரிக்கா இப்போது அங்கீகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. சீனா தொடர்ந்து திபெத்தை உரிமை கொண்டாடி வந்தபோதும் இதுவரையில் திபெத் அரசாங்கத்துக்கு அல்லது அதன் தலைவர்களுக்கு அமெரிக்கா ஒரு போதும் இராஜதந்திர முக்கியத்துவம் கொடுத்ததில்லை ஆனால் தற்போது முக்கியத்துவம் கொடுக்க முன் வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே செங்கே அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் விளைவாகவே இது கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அங்கிகரிப்பு சீனா-அமெரிக்கா மற்றும் சீனா-திபெத் இடையேயான உறவை பதற்றம் அடைய வைத்துள்ளது. அதாவது தர்மசாலாவில் உள்ள நாடு கடந்த திபெத் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் பிரதமர் செங்கேவுக்கு வெள்ளை மாளிகை வருமாறு அழைப்பு வந்துள்ளதை உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் செங்கே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவு துறையால் விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் வெளியுறவுத்துறை சிறப்பு இயக்குனரான ராபர்ட் டெஸ்ட்ரோவை சந்தித்தார். அதாவது இதற்கு முன்னர் எந்த திபெத்திய தலைவரும் மற்றொரு நாட்டின் வெளியுறவு அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியதில்லை எனக் கூறியுள்ளார்.
இரண்டு ஜனநாயக நாடுகள் ஒருவருக்கொருவர் அங்கிகரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், திபெத் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகையிலிருந்து அழைக்கப்படுவது ஒரு முக்கியமான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. செங்கே வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்திப்பார் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.