உலகையே அச்சுறுத்தி வரும் சிக்குன்குனியா.. கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி - உடனே அமெரிக்கா வழங்கிய ஒப்புதல்!
Washington : சிக்குன்குனியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று வியாழன் அன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸாகும். இதை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் "வளர்ந்து வரும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்" என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
Ixchiq என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, 18 வயது மற்றும் அதற்கு மேல், பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு செலுத்த அங்கீகரிக்கப்பட்டது என்று FDA தெரிவித்துள்ளது. அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரின் இந்த கிறீன் சிக்னல், வைரஸ் பாதிப்பு பரவலாக உள்ள நாடுகளில் தடுப்பூசியின் வெளியீட்டை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்குனியா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஒரு பகுதியின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் மிகவும் பரவலாக உள்ளது. "இருப்பினும், சிக்குன்குனியா வைரஸ் புதிய புவியியல் பகுதிகளுக்கு பரவியுள்ளது என்பது தான் அதிர்ச்சி தரும் செய்தி.
கத்தார் ராணுவ ரகசியத்தைக் கசியவிட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்த முயலும் இந்தியா
இதனால் இந்த நோயின் உலகளாவிய பரவல் அதிகரிக்கிறது" என்று FDA கூறியது, கடந்த 15 ஆண்டுகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். "சிக்குன்குனியா வைரஸ் தொற்று கடுமையான நோய் மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இயல்பிலேயே உடல்நலக்குறைவு உள்ளவர்களை இது அதிகம் பாதிக்கும் என்று" மூத்த FDA அதிகாரி பீட்டர் மார்க்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"இந்நிலையில் இன்றைய இந்த ஒப்புதல் ஒரு மருத்துவ தேவையை நிவர்த்தி செய்கிறது மற்றும் வரையறுக்கப்பட்ட சிகிச்சை விருப்பங்களுடன், நோயை பலவீனப்படுத்தும், நோய் தடுப்பு யுக்தியில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்."
“கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு.. ஆனால் அது..” விஞ்ஞானிகள் சொன்ன தகவல்
தடுப்பூசி ஒரு டோஸில் செலுத்தப்படுகிறது மற்றும் மற்ற தடுப்பூசிகளுடன் நிலையானது போல, சிக்குன்குனியா வைரஸின் நேரடி, பலவீனமான பதிப்பைக் கொண்டுள்ளது. வட அமெரிக்காவில் 3,500 பேரிடம் இரண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தலைவலி, சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, காய்ச்சல் மற்றும் குமட்டல் ஆகியவை பொதுவாக உள்ள பக்கவிளைவுகள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சோதனைகளில் Ixchiq பெறுநர்களில் 1.6 சதவிகிதம் பேருக்கு தீவிரமான எதிர்வினைகள் பதிவாகியுள்ளன, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.