Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு அமெரிக்கா விருது...!!! வயிற்றெரிச்சலில் கதறுது பாகிஸ்தான்...!!

 பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான அரசர் ஹிமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது அளிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் பிரதமருக்கு அமெரிக்க நாட்டி நிறுவனம் விருது வழங்க முன்வந்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

america annonce new award to indian prime minister modi
Author
Delhi, First Published Sep 3, 2019, 1:49 PM IST

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பாராட்டி அமெரிக்காவின் கேட் மெலிந்தா என்ற நிறுவனம் அவருக்கு விருது அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரத அலுவலக விவகாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் வெளியிட்டுள்ளார். america annonce new award to indian prime minister modi

கடந்த 2014-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் நூற்றாண்டு நினைவாக பிரதமர் மோடி அவர்கள், சுகாதாரமான இந்தியா என்ற முழக்கத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். குப்பைகள் அற்ற இந்தியா.  கழிவறைகள் இல்லாத வீடுகளுக்கு கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டு இத் திட்டம் தொடங்கப்பட்டது. america annonce new award to indian prime minister modi

அதன் மூலம் இதுவரை நாட்டில் சுமார் 9 கோடி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தூய்மையை மக்கள் இயக்கமாக மாற்றிய பிரதமர் மோடியை பாராட்டும் வகையில், அமெரிக்காவின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் அவரது  மனைவி மெலிந்தா ஆகியோர் இணைந்து உலக சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்திவரும் கேட் மெலிந்தா என்ற அமைப்பின் மூலம்  பிரதமர் மோடிக்கு தூய்மைக்கான விருது  அறிவித்துள்ளனர். america annonce new award to indian prime minister modi 

அதற்கான தகவலை பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் போது, அவருக்கு  இந்த விருது வழங்கப்படவுள்ளது. கடந்த வாரம் அமீரகம் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான அரசர் ஹிமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது அளிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் பிரதமருக்கு அமெரிக்க நாட்டி நிறுவனம் விருது வழங்க முன்வந்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. பஹ்ரைன் நாடு பிரமருக்கு விருது வழங்கியது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்கா விருதுகொடுக்க முன்வந்துள்ளது குறிப்பிடதக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios