அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எமகண்டம் .. இறந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி.
அந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அமெரிக்கா பயங்கரவாதிகளை வேட்டையாட களமிறங்கியது, அதில் தலிபான் தலைவர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் ஜவாஹிரி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களில் விமானத்தை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய செய்தது.
அந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அமெரிக்கா பயங்கரவாதிகளை வேட்டையாட களமிறங்கியது, அதில் தலிபான் தலைவர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பின்லேடனை போலவே அதிபயங்கரமான அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் ஜவாஹிரி கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார் என தகவல்கள் வெளியானது. அவர் நீண்ட நாட்களாக வீடியோ ஏதும் வெளியிடாததால் அது உண்மை என்று பலரும் நம்பினார். பின்லேடனுக்கு நிகராக கருதப்படும் அய்மான் ஜவாஹிரி உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் அமெரிக்காவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரட்டை கோபுர தாக்குதல் துயரத்திற்கு இருபதாம் ஆண்டு துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அய்மான் அதிரடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜிகாதிஸ்ட் குழுக்களில் சமூக வலைதளங்கள் செயல்பாட்டை கண்காணிக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் எஸ்.ஐ.டி.இ புலனாய்வுக்குழு அய்மான் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டிருப்பதை உறுதிசெய்துள்ளது. எஸ்.ஐ.டி.இ இயக்குனர் ரீட்டா கார்ட்ஸ் இதுகுறித்து பரபரப்பு ட்வீட் செய்துள்ளார். அதில், ஜவாஹிரி உயிரிழந்ததாக வெளியான வதந்திகளுக்கு மத்தியில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி ஒரு புதிய 60 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார், இது அவர் இன்னும் இறக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. ஜவாஹிரி வெளியிட்டுள்ள வீடியோவில் "அல்லா பாதுகாக்கட்டும்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும் இந்த வீடியோவில், அல்-கொய்தா பயங்கரவாதிகள் பின்னணியில் இருப்பது பதிவிகா உள்ளது.
அய்மான் அல் ஜவாஹிரி, தனது வீடியோவில், சிரியாவில் உள்ள அல்-காய்தாவுடன் இணைந்து ஹுராஸ் அல்-டீன் ரஷ்ய இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதை வரவேற்றுள்ளார். மேலும், ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது என கூறியுள்ளார். "9/11 முதல் உலகளாவிய ஜிஹாதி இயக்கங்களில் பயணத்தில் தலிபான்களின் முக்கியத்துவத்தின் மற்றொரு சமிக்ஞை இது என்றும், மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றி, அல்-காய்தாவின் வெற்றி" என்றும் காட்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வீடியோவில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடதக்கது.