அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான்..!! டுபாக்கூர் வேலை அம்பலம்..!!
இந்தியாவை குறிவைத்து தாக்கிவரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு புகலிடமாக விளங்குவதுடன், தங்கள் நாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புகள் செயல்பட பாகிஸ்தான் அனுமதித்து வருவதாகவும், அமெரிக்கா பாகிஸ்தானை கண்டித்துள்ளது.
இந்தியாவை குறிவைத்து தாக்கிவரும் பயங்கரவாதக் குழுக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு புகலிடமாக விளங்குவதுடன், தங்கள் நாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புகள் செயல்பட பாகிஸ்தான் அனுமதித்து வருவதாகவும், அமெரிக்கா பாகிஸ்தானை கண்டித்துள்ளது. பயங்கரவாத நிதியுதவியை பெறுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சுமாரான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அமெரிக்கா சுட்டிகாட்டியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிராந்திய ரீதியில் கவனம் செலுத்தும் சில பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பாதுகாப்புமிகுந்த புகலிடமாக இருப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு சேவையாற்றி வருவதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை குறிவைத்து தீங்குவிளைவிக்கும் ஆப்கனிஸ்தான் தாலிபன் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், தங்கள் நாட்டில் பதுங்கியிருந்து செயல்பட பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய செயல்பாட்டு திட்டத்தை கொண்டுவந்திருப்பதாக பாகிஸ்தான் கூறியது. அதாவது எந்த பாகுபாடுமின்றி விரைந்து தீவிரவாத குழுக்களை நாட்டிலிருந்து அகற்றுவதே அந்த திட்டத்தின் நோக்கம் என பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் அந்த திட்டத்தின் அம்சங்களை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. 2008 மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சஜித் மிர், மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசார் போன்ற பயங்கரவாத தலைவர்கள் மீது வழக்கு தொடர பாகிஸ்தான் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
அவர்கள் இருவரும் அரசின் பாதுகாப்பில் பாகிஸ்தானில் வசிப்பதாக பரவலாக நம்பபடுகிறது என அந்த அறிக்கையில் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் லஷ்கர்-இ-தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சையத் மற்றும் அவரது 12 கூட்டாளிகள் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தாலும் மற்ற பயங்கரவாத தலைவர்களான ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா, சஜித் மிர் போன்றவர்கள் மீது வழக்கு தொடரவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கங்களின் மீது இதுவரை இஸ்லாமாபாத் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லை, இது பாகிஸ்தானின் செயல்பாட்டுத் திறனை குறைத்து மதிப்பிடுவதற்கு காரணமாக அமையும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.