அன்று மொகலாயர்கள்.. இன்று ரஷ்ய அதிபர் புடின்.. இந்திய தூதர் வெளியிட்ட ‘அதிர்ச்சி’ தகவல் !!
மொகலாயர்கள் ராஜபுத்திரர்களை படுகொலை செய்தது போல், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது என்று இந்தியாவுக்கான தூதர் இகோர் பொலிகா குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் நேற்று நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் இறந்தார். இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான தூதர் இகோர் பொலிகா, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சாத்தியமான அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தி தாக்குதலை நிறுத்த வேண்டும். உடனே நிறுத்த வேண்டும். மக்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருக்கிறது.
இது ராஜபுத்திரர்களுக்கு எதிராக முகலாயர்கள் ஏற்பாடு செய்த படுகொலை போன்றது ஆகும். தற்போது உக்ரைன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதலை நிறுத்த புடினுக்கு எதிரான நடவடிக்கை அனைத்து நாட்டு தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும். இந்திய பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘இந்தியாவின் இந்த உதவி, நாங்கள் எப்பொழுதும் இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இன்று போலந்தில் முதல் விமானம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு அதிகபட்ச மனிதாபிமான உதவி கிடைக்கும் என்று வெளியுறவுச் செயலர் எனக்கு உறுதியளித்தார்’ என்று கூறினார்.