Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் அமேசான்: அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி

இந்தியாவில் மேலும் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி தெரிவித்துள்ளார்.

Amazon Plans To Invest 15 Billion More In India, Says Company CEO After Meeting PM Narendra Modi
Author
First Published Jun 24, 2023, 8:17 AM IST

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி, இதுவரை இந்தியாவில் 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது என்று கூறினார்.

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மேலும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் மொத்த முதலீட்டை 26 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது.

Amazon Plans To Invest 15 Billion More In India, Says Company CEO After Meeting PM Narendra Modi

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி, அமேசான் நிறுவனம் இதுவரை இந்தியாவில் 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடியுடன் நான் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல் நடந்தது.

நாங்கள் பல இலக்குகளை பகிர்ந்து கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.  அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாகும். நாங்கள் இன்றுவரை 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளோம். மேலும் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளோம். இது 26 பில்லியன் அமெரிக்க டாலராகக் கொண்டு வரும்” என்றார்.

இந்தியாவிற்கு வரும் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. Google நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு

பிரதமர் மோடியின் சைவ விருந்தில் இடம்பெற்ற ‘படேல் ரெட் பிளெண்ட் 2019’ ஒயின் - ஏன், எதற்கு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios